பதிவு செய்த நாள்
29 மே2017
05:09

டிஜிட்டல் வாலெட் சேவை நிறுவனமான பேடிஎம், பேமென்ட் வங்கியை துவக்கியுள்ளது. ஏற்கனவே ஏர்டெல் மற்றும் இந்தியா போஸ்ட் சார்பில் பேமென்ட் வங்கி துவக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரிசையில் பேடிஎம் பேமென்ட் வங்கியும் சேர்ந்துள்ளது. பேமென்ட் வங்கிகள் புதிய வகை வங்கிகளாகும். இவை அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை ‘டிபாசிட்’ ஏற்கலாம். டெபிட், ஏ.டி.எம்., கார்டு வழங்கலாம். கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்க முடியாது. புதிய வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றி ஒரு பார்வை:
வட்டி விகிதம்
பேடிஎம் பேமென்ட் வங்கி4 சதவீதம்
ஏர்டெல் பேமென்ட் வங்கி7.25 சதவீதம்
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி5.5 சதவீதம் வரை
இணைய வழி பண பரிமாற்றம்
பேடிஎம் பேமென்ட் வங்கி இணைய வழி பண பரிவர்த்தனையை இலவசமாக வழங்குகிறது. இந்தியா போஸ்ட் கிளையில் நிகழும் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கிறது. நெப்ட் கட்டணம் பரிவர்த்தனைக்கு, 2.5 முதல் 5 ரூபாய். ஐ.எம்.பி.எஸ்., கட்டணம் பரிவர்த்தனைக்கு, 5 ரூபாய். ஏர்டெல் வங்கி கணக்குகளுக்கு இடையிலான பரிவர்த்தனை இலவசம். மற்ற வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை தொகையில், 0.5 சதவீதம்
டெபிட் கார்டு வசதி
ஏர்டெல் பேமென்ட் வங்கி, விர்ச்சுவல் மாஸ்டர் கார்டு வழங்குகிறது. பேடிஎம் ரூபே டெபிட் கார்டு, விர்ச்சுவல் கார்டு வழங்குகிறது. ஆண்டு கட்டணம், டெலிவரி கட்டணம் உண்டு. இந்தியா போஸ்ட் டெபிட் கார்டை இலவசமாக அளிக்கிறது. இரண்டாம் ஆண்டு முதல் பராமரிப்பு கட்டணம் உண்டு. ஆட் ஆன் கார்டுக்கும் கட்டணம் உண்டு.
ஏ.டி.எம்., பரிவர்த்தனை
பேடிஎம் பேமென்ட் வங்கி மெட்ரோ அல்லாத நகரங்களில் மாதம், 5 முறை இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கிறது. மெட்ரோக்களில் இது மூன்று முறை. அதன் பிறகு ஒரு முறை பணம் எடுக்க, 20 ரூபாய் கட்டணம். ஏர்டெல் மையங்கள் மூலம் பணம் எடுக்கும் போது, அந்த தொகையில், 0.65 சதவீதம் கட்டணம் உண்டு. இந்தியா போஸ்ட் தனது மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி, ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால், இலவசமாக அனுமதிக்கும். மற்ற வங்கி, ஏ.டி.எம்.,கள் எனில் மெட்ரோக்களில் மாதம், 3 முறை மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் மாதம், 5 முறை கட்டணம் இல்லை.
குறைந்தபட்ச தொகை
‘பேடிஎம்’மில் குறைந்தபட்ச தொகை இல்லை. ஏர்டெல்லில், 100 ரூபாய் துவக்க டிபாசிட் செலுத்த வேண்டும். இந்தியா போஸ்ட்டில், 100 ரூபாய் டிபாசிட் செய்து கணக்கு துவக்க வேண்டும். ஆனால், குறைந்தபட்ச தொகை கிடையாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|