பதிவு செய்த நாள்
29 மே2017
12:18

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1935ல், கோ - ஆப் டெக்ஸ் நிறுவனத்தை, தமிழக அரசு துவக்கியது. மாநிலம் முழுவதும், 200 விற்பனையகங்கள் உள்ளன. இவற்றில், தனியார் விற்பனை மையங்களுக்கு இணையாக, 'ஏசி' உட்பட, பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. நெசவாளர்களின் உற்பத்தியை முழுமையாக சந்தைப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும், விற்பனை கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பயனாக, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், விற்பனையில் சாதித்துள்ளது.
இது குறித்து, கோ - ஆப்டெக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோ - ஆப் டெக்ஸ், பல உத்திகளை கையாண்டு வருவதால், 2016-17ல், 315 கோடி ரூபாய்க்கு ஆடைகளை விற்று, சாதித்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, இரண்டு கோடி ரூபாய் அதிகம். நடப்பு நிதியாண்டில், ரூ.325 கோடி ரூபாய்க்கு ஆடைகள் விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|