பதிவு செய்த நாள்
30 மே2017
05:56
புதுடில்லி : தாமஸ் குக் நிறுவனம், நடப்பாண்டில், சுற்றுலா வணிகத்தில், 16 சதவீதம் வளர்ச்சி காண முடிவு செய்துள்ளது.
தாமஸ் குக் இந்தியா, அன்னிய செலாவணி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது, இந்தியா, இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில், 85 நகரங்களில், 223 இடங்களில் செயல்படுகிறது. நடப்பாண்டில், தாமஸ்குக், அதிகளவில் வளர்ச்சி காண திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மாதவன் மேனன் கூறியதாவது: டிஜிட்டல் முறையின் கீழ், இணையதளம் வாயிலாக, சுற்றுலா தொடர்பான சேவை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கள் நிறுவனத்தின் மொத்த வியாபாரத்தில், இணையதளத்தின் பங்கு, 21 சதவீதம் என்றளவில் உள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய், 8,682.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 6,157.02 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. நடப்பாண்டில், எங்கள் நிறுவனம், சுற்றுலா வணிகத்தில், 16 சதவீதம் வளர்ச்சி காண திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|