‘சர்வதேச உருக்கு மையமாக இந்தியா உருவெடுக்கும்’‘சர்வதேச உருக்கு மையமாக இந்தியா உருவெடுக்கும்’ ... ரூபாயின் மதிப்பு சரிவு ரூ.64.66 ரூபாயின் மதிப்பு சரிவு ரூ.64.66 ...
‘நாட்டின் முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் மின்னணு வணிகத்தில் முன்னிலை பெறும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2017
05:58

பெங்களூரு : ‘இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள், புதிய தொழிற்­நுட்­பங்­களை விரை­வாக புகுத்தி, வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க தவ­றி­ய­தால், அவற்­றின் வர்த்­த­கம் பாதிக்­கப்­பட்டு, ஏரா­ள­மா­னோர் வேலை­யி­ழக்க நேரி­டும்’ என, ‘ஹெட் ஹன்­டர்ஸ்’ ஆய்வு நிறு­வ­னம், சமீ­பத்­தில் தெரி­வித்­தி­ருந்­தது.

தற்­போது, இதே நிறு­வ­னம், ‘டி.சி.எஸ்., – இன்­போ­சிஸ் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­க­ளுக்கு, எந்த பாதிப்­பும் ஏற்­ப­டாது; அவை, இந்­திய மின்­னணு வணி­கத்­தில் முன்­னிலை வகிக்­கும்’ என, தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிறு­வ­னர் கிரிஸ் லஷ்­மி­காந்த், பி.டி.ஐ., செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த பேட்டி: அமெ­ரிக்­கா­வின், ஐ.பி.எம்., – அசெஞ்­சர் போன்ற, ஐ.டி., நிறு­வ­னங்­கள் பல ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே, அவற்­றின் மின்­னணு தொழிற்­நுட்­பத் திறனை மேம்­ப­டுத்த, ஏரா­ள­மான அள­வில் முத­லீடு செய்­யத் துவங்­கி­விட்­டன. அத­னால், 2015ல், ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு கிடைத்த, 137 மின்­னணு தொழிற்­நுட்ப ஒப்­பந்­தங்­களில், ஐ.பி.எம்., – அசெஞ்­சர் ஆகிய நிறு­வ­னங்­கள், முறையே, 45 மற்­றும் 16 ஒப்­பந்­தங்­களை கைப்­பற்­றின.

அதே சம­யம், காக்­னி­ஸன்ட், இன்­போ­சிஸ் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு, முறையே, 8 மற்­றும் 5 ஒப்­பந்­தங்­களும், டி.சி.எஸ்., மற்­றும் விப்­ரோ­வுக்கு, தலா, 4 ஒப்­பந்­தங்­களும் கிடைத்­தன.இந்­தாண்­டும், இது­வரை ஒப்­பந்­தங்­களை பெற்­ற­தில், ஐ.பி.எம்., – அசெஞ்­சர் ஆகிய நிறு­வ­னங்­கள் முன்­னிலை வகிக்­கின்றன. இந்­நி­று­வ­னங்­கள், அவற்­றின் புதிய தொழிற்­நுட்ப வச­தி­கள் மூலம், இந்­திய நிறு­வ­னங்­களை விஞ்சி நிற்­கின்றன.

எனி­னும், டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின், என்.சந்­தி­ர­சே­க­ரன், இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் விஷால் சிக்கா, டெக் மகிந்­தி­ரா­வின், சி.பி.குர்­னானி ஆகிய மூத்த அதி­கா­ரி­க­ளுக்கு, இரு ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே, மாறப் போகும் புதிய மின்­னணு தொழிற்­நுட்­பங்­கள், எதிர்­கொள்ள உள்ள சவால்­கள் ஆகி­யவை குறித்த தெளி­வான புரி­தல் இருந்­தது. தற்­போது, இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­களின் கவ­னம், தொழி­லா­ளர்­கள் தேவைப்­படும் திட்­டங்­களில் இருந்து, தன்­னிச்­சை­யாக நடை­பெ­றும் திட்­டங்­கள் பக்­கம் திரும்­பி­யுள்­ளது.

குறிப்­பாக, மேக கணினி, தன்­னிச்­சை­யாக பணி­களை மேற்­கொள்­ளும் சாப்ட்­வேர், செயற்கை நுண்­ண­றி­வு­டன் பணி­யாற்­றும் சாப்ட்­வேர் போன்ற, உயர் தொழிற்­நுட்ப மெய்­நி­கர் வச­தி­களை மேம்­ப­டுத்­திக் கொள்­வ­தில் முனைந்­துள்ளன.

இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­க­ளி­டம் அப­ரி­மி­த­மான பணம் கையி­ருப்­பில் உள்ள போதி­லும், அவற்றை, அசெஞ்­சர் போல, பிற நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்த பயன்­ப­டுத்­திக் கொள்­ளா­மல் உள்ளன. இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்­கா­வில் வாடிக்­கை­யா­ளர்­களை கொண்­டுள்ள, ஐ.டி., நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்த வேண்­டும். அதன் மூலம், புதிய தொழிற்­நுட்ப வச­தி­களை அறிந்து, பயன் பெற முடி­யும். இத்­த­கைய சூழ­லி­லும், டி.சி.எஸ்., – இன்­போ­சிஸ் உள்­ளிட்ட, முன்­னணி நிறு­வ­னங்­கள், இந்­திய மின்­னணு வர்த்­த­கத்­தில் முன்­னிலை வகிக்­கும் என்ற நம்­பிக்கை உறு­தி­யாக உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)