இந்தாண்டு 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் உறுதிஇந்தாண்டு 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் ... ... டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெற்­றிக்­கான ஐந்து வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
07:40

வலைப்­பின்னல் மார்க்­கெட்டிங் துறைக்கு வழி­காட்டும் வகையில், ‘கொஸ்டீன்ஸ் ஆர் தி ஆன்சர்ஸ்’ எனும் புத்­த­கத்தை எழு­தி­யுள்ள ஆலன் பீஸ், இதற்­கான முதல் படி­யான வெற்­றிக்­கான, ஐந்து வழி­களை சுவா­ரஸ்­ய­மாக விவ­ரிக்­கிறார்:

வெற்றி என்­பது ஓர் ஆட்டம். அதை எத்­தனை முறை விளை­யா­டு­கி­றீர்­களோ, அந்த அளவு வெற்­றிக்­கான வாய்ப்பு அதிகம். அதிக முறை வெற்றி பெற்றால், நீங்கள் வெற்­றி­க­ர­மான ஆட்­டக்­கா­ரர்­க­ளா­வீர்கள் என்­பது நான் கற்­றுக்­கொண்ட பாடம். இதை வலைப்­பின்னல் உத்­திக்கும் பொருத்திப் பார்க்­கலாம். அதி­க­மான மனி­தர்­களை, உங்­க­ளுடன் சேரு­மாறு தொடர்பு கொள்­வதன் மூலம், அதி­க­மா­ன­வர்கள் உங்­க­ளுடன் இணைவர். எனவே முதல் விதி என்­பது, அதிக மனி­தர்­களை சந்­தித்துப் பேசுங்கள் என்­ப­தாகும்.

நீங்கள் சொல்­வதை காது கொடுத்து கேட்­கக்­கூ­டிய எவ­ரி­டமும் பேசுங்கள். நீங்­க­ளாக ஏதா­வது நினைத்துக் கொண்டு, நல்ல வாய்ப்பை தவ­ற­வி­டு­ப­வர்­க­ளாக இருக்க வேண்டாம். இவர்கள் மிகவும் வய­தா­ன­வர்கள், மிகவும் பணக்­கா­ரர்கள் என்­றெல்லாம் நினைத்து ஒதுங்க வேண்டாம்; எல்லாரிடமும் பேசுங்கள்.

அதி­க­மான மனி­தர்­களை சென்றுப் பாருங்கள் என்­பது தான் இரண்­டா­வது விதி. இதுவே மூன்­றா­வது விதி. நீங்கள் நன்­றாக பேசக்­கூ­டி­ய­வ­ராக இருக்­கலாம், ஆனால், அதிக மனி­தர்­களை சந்­திக்­கா­ விட்டால், எந்த பலனும் இல்லை. எனவே, எல்­லா­ரி­டமும் பேசுங்கள். பெரும்­பா­லா­னோ­ருக்கு தோல்வி ஏற்­ப­டு­வது, பல­ரையும் சம்­ம­திக்க வைக்க முடி­யா­ததால் அல்ல, அதற்­கேற்ப பலரை பார்க்­காமல் இருப்­பதே ஆகும். எல்­லா­ரையும் சந்­தித்துப் பேச முயற்­சிக்­கவும். இந்த மூன்று விதி­களை கடைப்­பிடித்தால் வெற்றி நிச்­சயம்.

சரா­சரி விதியில் நம்­பிக்கை கொள்­ளுங்கள் என்­பது நான்­கா­வது வழி. அதா­வது, சில செயல்­களை விடாமல், ஒரே வித­மாக செய்து வந்தால், அவற்­றுக்­கான பலன் சீராக இருக்கும். காப்­பீடு வாங்க விரும்­பமா என கேட்டால், 56 பேர்­களில், ஒருவர் ஆம் என பதில் சொல்­வதை நான் அனு­ப­வத்தில் உணர்ந்­துள்ளேன். ஆக, 168 பேரிடம் இந்த கேள்­வியை கேட்க முடிந்தால், 3 பாலி­சிகள் நிச்­சயம். ஒவ்­வொரு கத­வாக தட்டிக் கொண்­டி­ருந்தால், ஏதா­வது ஒரு கதவு திறக்கும்.

உங்கள் சரா­சரி விகி­தத்தை அதி­க­ரிப்­பது தான், ஐந்­தா­வது விதி. 10 பேரை சந்­தித்து பேசினால், ஆறு பேர் ஆத­ர­வாக பதில் அளிக்­கலாம். ஆனால், இதற்கு எவ்­வ­ளவு நேரம் வேண்டும் என, பார்க்க வேண்டும். இது உண்­மையில் திட்­ட­மிடும் பிரச்னை தானே தவிர, விற்­பனை செய்யும் பிரச்னை அல்ல. வெற்றி வாய்ப்பை அதி­க­மாக்க வேண்டும் எனில், அதற்கு எளிய வழி இருக்­கி­றது. அது வருங்­கால வாடிக்­கை­யா­ளர்­களை இப்­போதே பார்த்து பேசு­வ­தாகும். அவர்­களை முன்­கூட்­டியே பார்த்து பேசும் போது, எதையும் விற்க வேண்டும் என்ற நெருக்­கடி இல்லை. அறி­முகம் ஏற்­ப­டுத்திக் கொண்டு, அதை பின் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)