பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
07:41

ஜி.எஸ்.டி., தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இணைய குறும்பதிவு சேவையான, ‘டுவிட்டர்’ மூலம் பதில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., முறை ஜூலை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜி.எஸ்.டி., தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு, இணையம் மூலம் பதில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘டுவிட்டர்’ முகவரி தனியே உருவாக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை, நிதித்துறை இணைந்து இந்த டுவிட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளன. @askGST_GoI எனும் முகவரிக்கு குறும்பதிவுகளாக கேள்விகளை சமர்ப்பிக்கலாம். இதற்கு நிதி அமைச்சக அதிகாரிகள் பதில் அளிப்பர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும், இந்த டுவிட்டர் முகவரியில் தங்கள் கேள்விகளை சமர்ப்பித்து விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டுவிட்டர் பக்கத்தை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றுகின்றனர். 100க்கும் மேல் குறும்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே பலர் ஆர்வத்துடன் இந்த பக்கத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவற்றுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|