டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதிடுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தங்க சேமிப்பு பத்­திரம் இப்­ப­டியும் வாங்­கலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
07:42

தங்க சேமிப்பு பத்­தி­ரத்தில் முத­லீடு செய்ய விரும்­பு­கி­ற­வர்கள், இவற்றை பங்­குச்­சந்தை பரி­வர்த்­தனை மூலம் வாங்கும் வாய்ப்­பையும் பரி­சீ­லிக்­கலாம் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.

கடந்த, 2015ம் ஆண்டு நவம்­பரில் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் அறி­முகம் செய்­யப்­பட்­டன. தங்­கத்தை பெள­தீக வடிவில் வாங்­கு­வ­தற்கு பதி­லாக பத்­திர வடிவில் வாங்­கு­வதை ஊக்­கு­விக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்­பட்­டது. இது வரை எட்டு கட்­டங்­க­ளாக பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை­யான அளவில் பத்­தி­ரங்­களை வாங்­கலாம். இவற்றின் முதிர்வு காலம், 8 ஆண்­டுகள். முத­லீடு காலத்தில் இவற்­றுக்கு வட்டி உண்டு. எனினும் ஒரு­வரின் வரு­மான வரி விகி­தத்­திற்கு ஏற்ப வட்டி வரு­மா­னத்­திற்கு வரி பொருந்தும். இந்த பத்­தி­ரங்­களை அவை வெளி­யி­டப்­படும் போது வங்­கிகள், தபால் அலு­வ­ல­கங்கள் மூலம் வாங்­கலாம். அதன் பின் இவை பங்­குச்­சந்­தை­யிலும் பட்­டி­ய­லி­டப்­பட்டு பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­கின்­றன.

இது­வரை வெளி­யிட்டு காலங்­களில் பத்­தி­ரங்­களை வாங்­காமல் தவ­ற­விட்­ட­வர்கள், பங்­குச்­சந்­தையில் பரி­வர்த்­தனை மூலமும் இவற்றை வாங்க வாய்ப்­பி­ருக்­கி­றது. பெரும்­பா­லான பத்­தி­ரங்கள் அவற்றின் வெளி­யீட்டு விலையை விட குறை­வாக பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­வதால், இது நல்ல வாய்ப்பு என்றும் வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். உதா­ர­ணத்­திற்கு, 5ம் கட்­ட­மாக வெளி­யிட்­டப்­பட்ட தங்க பத்­திரம், அண்மை நில­வ­ரப்­படி கிரா­முக்கு, 2,828.6 ரூபாய் என பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­கி­றது. வெளி­யீட்டு விலையை விட இது, 10.2 சத­வீதம் குறை­வாகும். இது­வரை பட்­டிய­லி­டப்­பட்­டுள்ள, 7 பத்­தி­ரங்­களில் முதல் இரண்டு கிராம், 2,700 ரூபாய்க்கும் குறை­வாக வெளி­யி­டப்­பட்ட முதல் இரண்டு கட்ட பத்­தி­ரங்கள் மட்­டுமே அதிக விலையில் பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­கின்­றன. மற்­ற­வற்றை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்­புள்­ளது.

எனவே, தங்க பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்ய விரும்­பு­கி­ற­வர்கள் பங்­குச்­சந்தை பரி­வர்த்­தனை மூலம் இவற்றை வாங்­கலாம் என்­கின்­றனர். ஆனால், தங்க பத்­தி­ரங்கள் குறை­வான எண்­ணிக்­கை­யி­லேயே பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­வதால் இவற்றை உட­ன­டி­யாக விற்­பது கடி­ன­மாக இருக்­கலாம் என்­பதை மனதில் கொள்ள வேண்டும். முதிர்வு காலம் வரை வைத்­தி­ருக்கும் எண்ணம் இருந்தால், தற்­போது உள்ள விலையில் இந்த பத்­தி­ரங்­களை சந்­தையில் வாங்­கு­வது ஏற்­ற­தாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)