பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
07:57

தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் ‘நிப்டி’ மற்றும் ‘சென்செக்ஸ்,’ தொடர்ந்து நான்கு வாரங்களாக உயர்ந்து, உச்சநிலையில் வர்த்தகமாயின. இந்த வளர்ச்சி, கடந்த ஆண்டு டிசம்பர் துவங்கி, ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதே வளர்ச்சி, வரும் நாட்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரம் வெளிவந்த, ஜி.டி.பி., மற்றும் ஜி.வி.ஏ., – ஐ.ஐ.பி., எனப்படும் தொழில் துறை வளர்ச்சி விகிதம் போன்றவை, நம் பொருளாதாரம் சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளதை உணர்த்துகிறது.
கடந்த வாரம், நாம் குறிப்பிட்டது போல, நிப்டி இன்டெக்ஸ், 9,680 என்ற நிலையை கடக்க இயலாமல் குறைந்து, 9,653 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது. இந்த வாரம் சில முக்கிய நிகழ்வுகள் சந்தை போக்கினை நிர்ணயிக்கும். அதாவது, வரும், 7ம் தேதி வெளியாகும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை, தென்மேற்கு பருவமழை துவக்கம்; ஜி.எஸ்.டி., கவுன்சில் மீதான விவாதம்; வாராக்கடன் பற்றிய கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு, ஏழு மாத கால தவணை வழங்கியது ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இந்த வாரம், வங்கி, நிறுவன பங்குகளில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். ரிசர்வ் வங்கியின் கடந்த கொள்கையை விட, வர இருக்கும் தீர்மானம் சந்தைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த வாரம், மருத்துவ துறை பங்குகள் தொடர் சரிவில் இருந்து மீண்டன. வரும் நாட்களில் இதன் போக்கில் சமநிலை காணப்படும். ஜி.எஸ்.டி., மீதான விவாதம், டெக்ஸ்டைல், தங்கம் மற்றும் காலணிகள் துறை சார்ந்த பங்குகளில் மாற்றம் உண்டாக்கும்.
சர்வதேச சந்தையில் பல நிகழ்வுகள், நம் பங்கு சந்தையில் மாற்றத்தை உண்டாக்கும். கடந்த வாரம் வெளிவந்த அமெரிக்க, என்.பி.பி., டேட்டா மற்றும் பிரிட்டனில் இந்த வாரம் நடைபெறும் பொதுத் தேர்தல் போன்றவை மாற்றங்களுக்கு வழி வகுக்கும். இத்துடன், ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த கூட்டமும், இவ்வாரம் நடைபெற உள்ளது. இந்த வாரம் நிப்டியின் அடுத்த இலக்கு 9,740 ஆகும்; 9,560 சப்போர்ட் ஆகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|