பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
07:59

கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடந்த இரு வாரங்களாக வீழ்ச்சியடைந்து வர்த்தகமாகிறது. மே மாத இறுதியில் நடைபெற்ற, ‘ஒபெக்’ எனப்படும், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டத்தில், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு, அதாவது, வரும் ஜூலை முதல் 2018 மார்ச் வரை உற்பத்தி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த முடிவு, சந்தையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மாறாக, கச்சா எண்ணெய் விலை சரிவு நிகழ்ந்தது. சந்தை எதிர்பார்த்ததை விட, குறைவான அளவே வந்த உற்பத்தி குறைப்பு தகவல், கச்சா எண்ணெய் விலைக்கு சாதகமாக அமையவில்லை.
மேலும், ‘ஷேல் ஆயில்’ எனப்படும் அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்த இரு ஆண்டின் உச்சநிலையில் உள்ளது. ஜூன் மாத தினசரி உற்பத்தி, 9 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது. எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகள், 700க்கும் மேலாக இயங்கி வருகின்றன. ஒபெக் நாடுகளின் உற்பத்தி குறைப்பு, அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிப்பால் ஈடுகட்டப்பட்டதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை பாதிப்படைந்தது.வரும் நாட்களில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில், 46 டாலர் நல்ல சப்போர்ட் ஆகும். இதனை கடக்கும் நிலையில், 44 டாலர் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 3,020 2,910 3,175 3,280என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 46 44 48.70 50.50
தங்கம், வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து நான்கு வாரங்களாக ஏறுமுகம் காணப்படுகிறது. உலகளவில், பொதுவாக தங்கம் ஒரு முதலீட்டு மூலதனமாகவே கருதப்படுகிறது. ஆனால், வெள்ளி பெரும்பாலும் தொழிற்சாலை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கவும் உபயோகிக்கப்படுகிறது.தங்கம், ஆபரணமாகவும், இ.டி.எப்., பாண்டு, நாணயம் மற்றும் தங்க கட்டி போன்றவை மூலமாகவும் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் பணவீக்க விகிதம் உயரும் போதும், பொருளாதார வளர்ச்சி குறையும் போதும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும். இந்நிலையில், கடந்த மே 2 – 3ம் தேதிகளில், அமெரிக்க மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இம்மாதத்திற்கு தள்ளி வைத்தது.
ஜன., – மார்ச் வரையிலான முதல் காலாண்டில், அமெரிக்காவின் ஜி.டி.பி., 0.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, கடந்த வாரம் தகவல் வெளியானது. இது, எதிர்பார்த்த வளர்ச்சியை விட குறைவாகும். காரணம், அந்நாட்டில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த குறைவான பொருளாதார வளர்ச்சி, முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தது. வரும், 13 – 14ம் தேதிகளில், அமெரிக்காவின் எப்.ஓ.எம்.சி., கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வட்டி விகிதம் குறித்து எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், சந்தையில் மாற்றத்தை உண்டாக்கும்.
தங்கம்
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 28,750 28,530 29,110 29,250காம்எக்ஸ் (டாலர்) 1,265 1,253 1,282 1,300
வெள்ளி
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூலை) 39,090 38,600 40,470 41,050காம்எக்ஸ் (டாலர்) 17.00 16.10 17.80 19.00
செம்பு
கடந்த வாரம் செம்பு விலை உயர்ந்து வர்த்தகமானது. இருப்பினும், வார நாட்களில் அதிகப்படியான விலை மாற்றங்களை சந்தித்தது. தொழிற்சாலை மூலதன பொருட்கள் நுகர்வில் அதிக பங்கு வகிக்கும் நாடாக, சீனா உள்ளது. மாதந்தோறும் 1ம் தேதி அன்று, பி.எம்.ஐ., எனப்படும் தொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண் அந்நாட்டு அரசால் வெளியிடப்படுகிறது. குறியீட்டு எண் 50 புள்ளிக்கு மேல் இருந்தால், பொருளாதார வளர்ச்சி என்றும், 50க்கு கீழ் இருந்தால், வீழ்ச்சி என்றும் கருதப்படுகிறது.
மே மாத தொழில் துறை வளர்ச்சி குறியீடு ஜூன் 1 அன்று வெளிவந்தது. அது, எதிர்பார்த்த, 57.8 புள்ளியை விட குறைவாக, 55.6 ஆக இருந்தது. இதே நாளில் இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தொழில் துறை வளர்ச்சி விபரங்களும் வெளி வந்தன.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 361.30 356 370 374
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|