பதிவு செய்த நாள்
06 ஜூன்2017
01:16

மும்பை : அன்னிய மியூச்சுவல்பண்டு நிறுவனங்கள், இந்தாண்டு, இந்தியா சார்ந்த முதலீட்டு திட்டங்களில், இதுவரை, 270 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்கள், எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டுகளில், 89.50 கோடி டாலர் முதலீடு மேற்கொண்டு உள்ளன. இதன் மூலம், இந்தாண்டு இந்நிறுவனங்கள் மொத்தம், 359.50 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.
கடந்த மே மாதம், அன்னிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், இந்தியா சார்ந்த முதலீட்டு திட்டங்களில், 36 கோடி டாலர் முதலீடு மேற்கொண்டு உள்ளன. எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டுகளில், 14 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. ஆக, இதே மாதத்தில், இந்த இரு வகையான முதலீடுகளில், அன்னிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், மொத்தம், 50 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. மேலும் மதிப்பீட்டு மாதத்தில், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 140 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களால், இந்தியா சார்ந்த அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|