பதிவு செய்த நாள்
06 ஜூன்2017
01:17
புதுடில்லி : நிக்கி இந்தியா மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய சேவைகள் துறையின் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோலான, நிக்கி இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மே மாதம், 52.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஏப்ரலில், 50.2 புள்ளிகளாக இருந்தது.
நாட்டின் சேவைகள் துறை, தொடர்ந்து, நான்கு மாதங்களாக வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது. கடந்த மாதம், சேவைகள் துறை நிறுவனங்களுக்கு, அதிக, ‘ஆர்டர்’ கிடைத்ததால், அவை கூடுதலாக பணியாளர்களை நியமித்துள்ளன. நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி, மிதமாக உள்ளது. இருந்த போதிலும், முந்தைய நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சேவைகள் துறையின் வளர்ச்சி விகிதம், மே மாதம் அதிகரித்துள்ளது.
எனினும், புதிய ஆர்டர்களின் வரத்து, வழக்கத்தை விட குறைந்துள்ளதும், அதிகரித்து வரும் போட்டியும், சேவைகள் துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம், சிறிது சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|