பதிவு செய்த நாள்
06 ஜூன்2017
01:18

புதுடில்லி : ‘‘உருக்கு துறையில், நவீன தொழிற்நுட்பத்துடன் வரும் அன்னிய முதலீட்டாளர்களை வரவேற்க, மத்திய அரசு தயாராக உள்ளது,’’ என, மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: தற்சமயம், நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 97 மில்லியன் டன் என்றளவில் உள்ளது. 2030ல், இதை, 300 மில்லியன் டன் என்ற அளவுக்கு உயர்த்த, மத்திய அரசு இலக்கு வைத்திருக்கிறது. அதனால், யாரேனும் புதிய தொழிற்நுட்பத்துடன், இங்கு தனியாகவோ அல்லது கூட்டு தொழிலாகவோ உருக்கு உற்பத்தியில் ஈடுபட விரும்பி வந்தால், அவர்களை வரவேற்கிறோம்.
இந்த விஷயத்தில், அமைச்சகம் மிகவும் வெளிப்படையாக உள்ளது. எந்த விதமான தொழிற்நுட்ப பரிமாற்றத்தையும் வரவேற்கிறோம். கூட்டுத் தொழிலாக செய்ய விரும்பினாலும், அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறோம். இத்துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு, அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அன்னிய முதலீட்டை இத்துறையில் அதிகரிக்க, அமைச்சகம் விரும்புகிறது. 300 மில்லியன் டன் என்ற இலக்கை, நிச்சயமாக எட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், கச்சா உருக்கு உற்பத்தி, 2016 – 17ம் நிதியாண்டில், 97,385 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டை விட, இது, 8.5 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|