பதிவு செய்த நாள்
07 ஜூன்2017
04:11
மும்பை : பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான, பார்லே புராடெக்ட்ஸ், அடுத்த கட்டமாக, தற்போது பருப்பு வகைகளை, பிரெஷ் ஹார்வெஸ்ட் என்ற பிராண்டில் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, என பல வகையான பருப்புகளை மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து பெற்று, விற்பனை செய்ய துவங்கியுள்ளது, பார்லே நிறுவனம்.இது குறித்து, இந் நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளுக்கான தலைவர், மயாங் ஷா கூறியதாவது:பார்லே நிறுவனத்தின் பருப்பு வகைகள் முதற்கட்டமாக, மஹாராஷ்ட்ராவில் 5 லட்சம் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் படிப்படியாக, நாட்டின் இதர பாகங்களிலும் அறிமுகம் செய்யப்படும்.நாட்டின் பருப்புத் தேவை, ஆண்டுக்கு 27 மில்லியன் டன் ஆகும். 2020ம் ஆண்டில் இது, 35 மில்லியன் டன் என்ற அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எங்கள், பிரெஷ் ஹார்வெஸ்ட் பிராண்டு மூலம் மிகவும் தரமான, கலப்படமற்ற பருப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். ஏற்கனவே பிஸ்கட் வணிகத்தில் இருப்பதால், வாடிக்கையாளர்களை சென்றடைவதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|