பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:35

மும்பை : மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கவும், தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் முறையை மக்களிடம் பிரபலப்படுத்தவும், ‘கோல்டு சவரன் பாண்டு’ எனப்படும் தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை, செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், 2015, நவம்பரில் முதன் முதலாக தங்க சேமிப்பு பத்திரங்களை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது.தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம், முதலாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 19 மாதங்களில், எட்டு முறை, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டதன் மூலம், 5,400 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.முதல் கட்ட வெளியீட்டில், 915.95 கிலோ மதிப்பிலான தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம், 246 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தங்க சேமிப்பு பத்திரத்தில், ஒரு நிதியாண்டில் ஒருவர், குறைந்தபட்சம், 1 கிராம் முதல் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி அடிப்படையில், அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|