பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:35

புதுடில்லி : ஜூலை 1 முதல் அறிமுகமாகும், ஜி.எஸ்.டி.,யில், ‘ஹைபிரிட்’ எனப்படும் மின்சாரம் மற்றும் எரிபொருளில் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களுக்கான வரியை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., குழுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளன.தற்போது, ‘ஹைபிரிட்’ கார்களுக்கு, 12.5 சதவீத உற்பத்தி வரியுடன், 12.5 சதவீத மதிப்பு கூட்டு வரி, 2 சதவீத மத்திய விற்பனை வரி, 1 சதவீத தேசிய பேரிடர் நிவாரண வரி மற்றும் இதர வரிகளையும் சேர்த்து, 30.3 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.ஜி.எஸ்.டி.,யில், பெட்ரோல், டீசல் கார்களை போல, ஹைபிரிட் கார்களுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.இத்துடன், 15 சதவீத கூடுதல் வரியும் சேர்த்து, ஹைபிரிட் காருக்கான வரி, 43 சதவீதமாகிறது.இந்த அளவிற்கு வரி உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் ஹைபிரிட் கார் தயாரிப்பு துறையின் வளர்ச்சியை பாதிக்கும் என, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அவை, 16ம் தேதி கூடும், ஜி.எஸ்.டி., குழு கூட்டத்தில், ஹைபிரிட் கார்களுக்கான வரியை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|