பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:36

மும்பை : நியூ ஹாலந்து அக்ரிகல்சர் நிறுவனம், இந்தியாவில், 230 குதிரை திறன் கொண்ட, புதிய டிராக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.சர்வதேச அளவில், வேளாண் இயந்திரங்கள் உற்பத்தியில், நியூ ஹாலந்து அக்ரிகல்சர் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு, இந்தியாவில், நொய்டாவில் தொழிற்சாலை உள்ளது. அங்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்; டீலர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் மையம் ஆகியவையும் உள்ளன. இந்நிறுவனம், இந்தியாவில், முதல் முறையாக, 230 குதிரை திறன் உடைய, டிராக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.இந்த டிராக்டரில், நவீன இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நியூ ஹாலந்து, தன், முதல் டிராக்டரை, ஆண்டனி லாரா என்விரோ என்ற நிறுவனத்துக்கு டெலிவரி செய்துள்ளது. திட கழிவுகளை, உரமாக்குவதற்கு உதவக் கூடிய, நவீன உபகரணங்கள், இந்த டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|