பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:37

புதுடில்லி : பொலராய்டு நிறுவனம், இந்தியாவில், எல்.இ.டி., ‘டிவி’ விற்பனையில், களம் இறங்கி உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பொலராய்டு நிறுவனம், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்திய சந்தையில், எல்.இ.டி., ‘டிவி’க்கள் விற்பனையில் களமிறங்கி உள்ளது.இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த பவர்புல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு, எல்.இ.டி., டிவி மற்றும் மானிட்டர்களை அசெம்பிள் செய்வதற்கு, அனுமதி வழங்கியுள்ளது. முதல் கட்டமாக, தலா, மூன்று மாடல்களில், எல்.இ.டி., டிவி மற்றும் மானிட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அவை, அமேசான் நிறுவனத்தின் இணையதள வணிகம் மூலம் விற்பனை செய்யப்படும். விரைவில், கடைகளிலும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தற்போது, இந்திய சந்தையில், பொலராய்டு நிறுவனம், ‘கேமரா, மொபைல் பிரின்டர், ஹெட் போன்ஸ், சன் கிளாசஸ்’ ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|