பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:37

புதுடில்லி : ‘‘தமிழகத்தில், ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், துறைமுகங்களை மேம்படுத்த, 2.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்,’’ என, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அவர், நேற்று முன்தினம், சென்னை அருகே உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், புதிய கன்டெய்னர் முனையம், பல சரக்கு முனையம் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியது குறித்து, கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக துறைமுகங்கள், ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், 2.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன.அதில், துறைமுகங்களை நவீனமயமாக்க, 39 ஆயிரம் கோடி ரூபாய்; துறைமுக இணைப்பு திட்டத்திற்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்களுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்.சாகர்மாலா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வாயிலாக, துறைமுக வர்த்தகமும், மாநில பொருளாதாரமும் வளர்ச்சி காணும். அத்துடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில், 2 லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிட்டும்.நாடு முழுவதும் சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகங்களை மேம்படுத்தவும், புதிய துறைமுகங்களை ஏற்படுத்தவும், துறைமுகங்களுக்கு இணைப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 419 திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|