பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:38

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்வதில், இந்தியர்கள், அதிக ஆர்வம் காட்டுவதாக, அந்நாட்டு சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஆஸ்திரேலிய சுற்றுலா துறை அதிகாரி கூறியதாவது:கடந்த, 2016ல், 2.59 லட்சம் இந்தியர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்தனர். அந்த எண்ணிக்கை நடப்பாண்டில், 2.80 லட்சமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. 2017 மார்ச் மாதம் மட்டும், 24 ஆயிரத்து, 100 இந்தியர்கள், ஆஸ்திரேலியா வந்தனர். இது, 2016 மார்ச் மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கையை விட, 3 சதவீதம் அதிகமாகும்.எங்கள் நாட்டுக்கு வரும், இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும், 8.7 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. டில்லி – சிட்னி இடையில், வாரத்துக்கு நான்கு முறையும்; டில்லி – மெல்போர்ன் இடையில், வாரத்துக்கு மூன்று முறையும், நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது. சுற்றுலா வரும் இந்தியர்கள், சராசரியாக, 5,316 ஆஸ்திரேலிய டாலர் செலவிடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|