பதிவு செய்த நாள்
11 ஜூன்2017
01:38

மும்பை, ஜூன் 11–‘கடந்த மே வரையிலான ஐந்து மாதங்களில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், 23 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன’ என, ஆய்வில் தெரியவந்துள்ளது.நிறுவனங்களின் கடன் தகுதியை நிர்ணயிக்கும், கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம், 2016 டிசம்பர் இறுதி முதல் இந்தாண்டு மே இறுதி வரை, 33 நாடுகளின் பங்குச் சந்தை குறியீடுகளின் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:மதிப்பீட்டிற்கான, ஐந்து மாதங்களில், சர்வதேச அளவில், பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 33 நாடுகளின் பங்குச் சந்தை குறியீடுகளின் சராசரி வளர்ச்சி, 14.9 சதவீதமாக உள்ளது.இந்த வளர்ச்சி, ‘சர்வதேச அளவில் மிகப் பெரிய பொருளாதார தாக்கம் எதுவும் இருக்காது’ என, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியங்களின் கணிப்பிற்கு ஏற்ப உள்ளது.இதே காலத்தில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் வளர்ச்சி, 20 சதவீதத்தை கடந்து, 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பிற்கு, பல காரணங்கள் உள்ளன.குறிப்பாக, பாதகமற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், தொழில் உற்பத்தி, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் அதிக அளவில் குவிந்து வரும் அன்னிய முதலீடுகள் உள்ளிட்டவற்றை கூறலாம்.மேலும், சமீபத்திய மாநில தேர்தல்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, பிரதமர் மோடி தலைமையிலான அரசை மேலும் வலுப்படுத்தி, முதலீட்டாளர் களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது.அத்துடன், ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும், இந்தாண்டு பருவ மழை நன்கு இருக்கும் என்ற முன்னறிவிப்பும், பங்குச் சந்தையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கத் துணை புரிந்துள்ளன.இந்த சாதகமான அம்சங்கள், கடந்த ஆண்டு, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மீறி, பங்குச் சந்தை முதலீடுகள் உயர வழி வகுத்துள்ளன.இந்தியா உட்பட, சர்வதேச பங்குச் சந்தைகள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|