23  சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள்  23 சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ... வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வங்­கி­களின் வாராக் கடன்­களை மொத்­த­மாக தலை­மு­ழு­கி­னால் என்ன!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
04:14

எண்­கள் பேசத் துவங்­கும்­போது, கண்­கள் பூத்­துப் போகின்றன. கருத்­து­கள் தடு­மாற ஆரம்­பித்து விடு­கின்றன. சமீ­பத்­தில் நம் கண்­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் தடு­மாற வைத்த எண்­கள், இந்­திய வங்­கி­களின் கடன் வளர்ச்சி விகி­தம்.

சென்ற 2016 செப்­டம்­பர் வரைக்­கு­மான வங்­கிக் கடன்­களின் வளர்ச்சி, 12.1 சத­வி­கி­தம். மார்ச் 2017 இறு­தி­யில் அது, 5.4 சத­வீ­தம். இந்த வீழ்ச்சி யாரை அதி­கம் பாதித்­தது? பெரு­ந­க­ரங்­கள், நக­ரங்­கள், சிறு­ந­க­ரங்­க­ளை­விட கிரா­மப் புறங்­க­ளையே அதி­கம் பதம் பார்த்­துள்­ளது. பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கையே வீழ்ச்­சிக்கு முக்­கிய கார­ணம் என்று சொல்­வது நம்மை நாமே ஏமாற்­றிக்­கொள்­வ­தற்­குச் சமம். பிரச்னை இன்­னும் விரி­வா­க­வும் ஆழ­மா­க­வும் பர­வி­யுள்­ளது.வங்­கிக் கடன்­க­ளைப் பற்றி ஏன் அக்­கறை? இன்­றைக்­கும் நமது நாட்­டின் பெருந்­தொ­ழில்­கள், சிறு, குறு தொழில்­கள் அனைத்­துக்­கும் கடன் கொடுப்­பவை எண்­பது சத­வி­கி­தம் பொதுத்­துறை வங்­கி­களே.

வாடிக்­கை­யா­ளர்­கள் பெறும் வீடு, வாகன, தனிப்­பட்ட கடன்­க­ளைப் பெரு­ம­ளவு வழங்­கு­வது வங்­கி­களே. நெடுஞ்­சா­லை­கள் அமைப்­பது, பாலங்­கள் எழுப்­பு­வது, மின்­சார உற்­பத்தி போன்ற இந்­தி­யா­வின் பெரும் உள்­கட்­டு­மா­னத் திட்­டங்­கள் அனைத்­துக்­கும் கடன் வழங்க பணிக்­கப்­ப­டு­வ­தும் பொதுத் துறை வங்­கி­களே.இந்­தப் பின்­ன­ணி­யில் இருந்து பாருங்­கள்... வங்­கி­க­ளது கடன் வளர்ச்­சி­வி­கி­தம் சரிந்­துள்­ளது பெருங்­க­வலை அளிக்­கும். எண்­கள் இப்­போது பேசத் தொடங்­கும்.

ஏன் இந்­தச் சரிவு?
கார­ணங்­கள் சிக்­க­லா­னவை. முக்­கி­ய­மா­ன­வற்றை மட்­டும் பார்ப்­போம்.1. கடன்­கள் வழங்க, வங்­கி­க­ளி­டம் போதிய நிதி வசதி இல்லை.2. கடன்­கள் வாங்­கும் தரப்­பில், திருப்­பிச் செலுத்த முடி­யும் என்ற நம்­பிக்­கைச் சரிவு.3. வங்­கி­கள் அல்­லாத இதர நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து கடன்­கள் பெறு­வது எளிது.

பொதுத் துறை வங்­கி­களின் நிதி நிலை­மையை வெகு­வாக பாதிப்­பது, வாராக் கடன்­கள். 2016 – 17 நிதி­யாண்­டில் ரூ.7. 65 லட்­சம் கோடி­யாக இருந்த வங்­கி­களின் வாராக்­க­டன், 2017 – 18 நிதி­யாண்­டில், ரூ.8.2 – 8.5 லட்­சம் கோடி­யாக உய­ரும் என்­பது கணிப்பு. அதா­வது வங்­கி­களின் மொத்த வரவு – செல­வில் சுமார் 16 –17 சத­வீ­தம், வாராக்­க­டன். இதில் பயிர்க்­க­டன், தொழிற்­க­டன், வீட்­டுக்­க­டன் என்று அனைத்­துமே அடங்­கும்.

ஒவ்­வொரு துறை­யும், பல்­வேறு கார­ணங்­க­ளால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யா­மல் தவிக்­கின்றன. பெரிய நிறு­வ­னங்­கள், தங்­கள் கடன்­களை மாற்­றி­ய­மைத்­துக் கொண்­டி­ருக்­கின்றன. சிறு, குறுந்­தொ­ழில்­களோ, பெரிய வளர்ச்­சி­யில்­லா­மல் தவிக்­கின்றன.

ஏன் இந்த நிலைமை?
பொது­வா­கவே, நுகர்­வோ­ரின் வாங்­கும் சக்தி உய­ரும் போது, உற்­பத்தி பெரு­கும். அத­னால், தொழில் வளர்ச்சி மேம்­படும். 2017 மார்ச் மாதத்­து­டன் முடிந்த காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 6.1 சத­வீ­த­மாக குறைந்­து­போ­னதை இத­னோடு தொடர்­பு­ப­டுத்­திப் பார்க்க வேண்­டும். வளர்ச்சி பெரு­க­வில்லை என்­ப­தையே இது காட்­டு­கிறது. ஆக, கொடுத்த கடன்­களை வங்­கி­க­ளால் முழு­மை­யா­கத் திரும்­பப் பெற முடி­ய­வில்லை. விளைவு, புதிய கடன்­க­ளைக் கொடுத்­தால் மென்­மே­லும் அது வாராக் கடன்­க­ளாக மாறி­வி­டுமோ என்ற அச்­சம்.

நுகர்­வோ­ரின் வாங்­கும் சக்தி ஏன் உய­ர­ வில்லை? உண்­மை­யில் உய­ரவே இல்­லையா? அப்­ப­டிச் சொல்ல முடி­யாது. தொழில் நிறு­வ­னங்­களும் ஆய்வு அமைப்­பு­களும் எதிர்­பார்க்­கும் வேகத்­தில் அது வள­ர­வில்லை. இந்­திய மக்­க­ளுக்கு இருக்­கும் பாது­காப்பு உணர்வு மெச்­சத்­தக்­கது. அவர்­கள் தங்­கள் வரு­வாயை சேமிப்­பு­க­ளாக மாற்­றவே விரும்­பு­கின்­ற­னர். வங்­கி­களில் உயர்ந்­துள்ள சேமிப்­பு­களும் தங்க நகை விற்­ப­னை­யுமே இதற்­குச் சான்று.

இன்­னொரு செய்­தி­யும் கவ­னிக்­கத்­தக்­கது. மார்ச் 2017 உடன் முடிந்த காலாண்­டில், பொதுத் துறை வங்­கி­கள் கொடுத்த கடன் தொகை­தான் சரிந்­த­னவே தவிர, தனி­யார் வங்­கி­கள் கொடுத்த கடன்­கள் பெரு­ம­ளவு குறை­ய­வில்லை. மேலும், இந்­தக் கால­கட்­டத்­தில் வங்­கி­யல்­லாத நிதி நிறு­வ­னங்­கள் வாயி­லாக கடன் பெற்­ற­வர்­களின் எண்­ணிக்கை அதி­கம். அங்கே, கடன் பெறு­வது ஏதோ ஒரு­வ­கை­யில் எளி­மை­யாக இருந்­தி­ருப்­பது கண்­கூடு.

பொதுத்­துறை வங்­கி­கள் செய்த ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மான வேலையை மெச்­சு­வது அவ­சி­யம். அவை பெரு­நி­று­வ­னங்­க­ளுக்கு நேர­டி­யாக கடன்­கள் வழங்­க­வில்­லையே தவிர, அவை வெளி­யிட்ட கடன் பத்­தி­ரங்­களில் பெரு­ம­ளவு முத­லீடு செய்­தி­ருக்­கின்றன. ஆர்.பி.ஐ., அனு­ம­தி­யோடு வெளி­யி­டப்­ப­டுவை தனி­யார் கடன் பத்­தி­ரங்­கள். அதில் முத­லீடு செய்­வ­தன் மூலம், மூல­த­னத்­துக்­கும் உத்­த­ர­வா­த­முண்டு, வட்­டிக்­கும் உத்­த­ர­வா­த­முண்டு.

வங்­கிக் கடன்­கள் பற்றி ஏன் இவ்­வ­ளவு கவ­லைப்­பட வேண்­டும்?
இரண்டு கார­ணங்­கள். அதன் மூலம், தொழில்­துறை பெரு­கும், உற்­பத்தி பெரு­கும், வளர்ச்சி பெரு­கும். அதை­விட முக்­கி­ய­மாக வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும். கடந்த மூன்­றாண்­டு­க­ளாக வேலை­வாய்ப்­பு­கள் போதிய அளவு பெரு­க­வில்லை என்­ப­தற்கு அடிப்­படை கார­ணங்­களில் ஒன்று தனி­யார் துறை முத­லீ­டு­கள் பெரு­க­வில்லை, வங்­கித் துறை கடன்­கள் பெரு­க­வில்லை என்­பது.

வங்­கி­களின் கடன் வளர்ச்­சியை உயர்த்­து­வது எப்­படி?
வேறு வழியே இல்லை. இது­நாள்­வரை வங்­கி­களில் தேங்­கிப் போயுள்ள வாராக் கடன்­களை ஒட்­டு­மொத்­த­மாக தலை­மு­ழு­கி­விட வேண்­டி­ய­து­தான். ஒழுங்­காக வரி கட்­டி­ய­வர்­க­ளுக்கு வயிற்­றெ­ரிச்­ச­லாக இருக்­கும். மக்­கள் பணத்தை சுருட்­டி­ய­வர்­கள் முதற்­கொண்டு, உண்­மை­யி­லேயே கடன்­க­ளைக் கட்­ட­மு­டி­யாத ஏழை விவ­சா­யி­கள் வரை அனை­வ­ரும் இத­னால் பயன் அடை­வர். கணக்­குப் புத்­த­கங்­களில் இருந்து கடன் எனும் பெருஞ்­சுமை நீங்­கி­னால்­தான், வங்­கி­க­ளுக்கு மீண்­டும் கடன் கொடுக்க துணிவு வரும். வீட்­டுக்­குள் இருக்­கும் பாம்­புப் புற்று, கடன். அதை இடித்­துத் தரை மட்­ட­மாக்­கி­னால்­தான் நிம்­ம­தி­யாக வாழ முடி­யும். இந்த ஆண்டு நல்ல மழைப்­பொ­ழிவு இருக்­கும் என்­கிறது இந்­திய வானிலை ஆய்வு மையம். அத­னால் விவ­சாய வளம்­பெ­ரு­கும், மக்­களின் நம்­பிக்­கை­யும் வாங்­கும் சக்­தி­யும் உய­ரும் என்று கணிக்­கப்­ப­டு­கிறது. மக்­களின் நம்­பிக்கை பெரு­கி­னால் மட்­டுமே இந்­திய வளர்ச்சி உய­ரும்.

-ஆர்.வெங்­க­டேஷ்பத்திரிகையாளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 12,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)