வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்!வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முதல் சேமிப்பு மைல் கல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
04:17

இலக்­கு­களை அடை­யவும் சரி, செல்­வத்தை பெருக்கி கொள்­ளவும் சரி, சேமிப்பு தான் அடிப்­படை. ஆனால், பலரும் போதிய அளவு சேமிப்­ப­தில்லை. குறிப்­பாக இளம் தலை­மு­றை­யினர் செல­வு­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை, சேமிப்­புக்கு அளிப்­ப­தில்லை. சம்­பா­திக்கத் துவங்கும் காலத்­தி­லேயே சேமிக்கத் துவங்­கு­வது, வருங்­கால வாழ்க்­கையை வள­மாக்கும். அந்த வகையில், முதல் ஒரு லட்­சத்தை சேமிப்­ப­தற்­கான வழிகள் இதோ:

பட்ஜெட் தேவைசேமிப்பு எண்ணம் வந்­த­வுடன், முதலில் செல­வு­களை கண்­கா­ணிக்கத் துவங்க வேண்டும். தின­சரி செலவு, வாடகை, போக்­கு­ வ­ரத்து செலவு உள்­ளிட்­ட­வற்றை குறித்து வைக்கும் போது எதில் எல்லாம் செலவு செய்­கிறோம் என்­பது புரியும். இதற்­காக, ‘எக்செல் கோப்பை’ பயன்­ப­டுத்­தலாம். நவீன செய­லி­களும் இருக்­கின்­றன. மாத இறு­தியில் கணக்கு பார்க்கும் போது, சேமிப்­ப­தற்கு எந்த அளவு வாய்ப்பு உள்­ளது எனத்­தெ­ரிய வரும்.

செலவை குறை­யுங்கள்செல­வு­களை கண்­கா­ணித்து ஒழுங்­கு­ப­டுத்­திய உடன், வீண் செல­வு­களை கண்­ட­றிந்து குறைக்க வேண்டும். வெளியே சாப்­பிடும் பழக்கம் இருந்தால், அலு­வ­ல­கத்­திற்கு சாப்­பாடு கொண்டு செல்­லலாம். எதில் எல்லாம் செல­வு­களை குறைக்க முடியும் என பார்த்து, சிக்­க­னத்தை கடைப்­பி­டிக்­கலாம். ஆரம்­பத்தில் இந்த தொகை சொற்­ப­மாக இருக்­கலாம். ஆனால், போகப்­போக கணி­ச­மாக கையில் நிற்கும்.

உறுதி தேவைசெல­வு­களை குறைப்­பதால் மிஞ்சம் தொகை சேமிப்­பாக மாறு­வதை உறுதி செய்­வது அவ­சியம். தானி­யங்கி சேமிப்பு வச­தியை இதற்­காக பயன்­ப­டுத்­திக் ­கொள்­ளலாம். மாதந்­தோறும் குறிப்­பிட்ட தொகை சம்­பள கணக்கில் இருந்து தொடர் வைப்பு நிதிக்கு மாற்­றப்­படும் வகையில் ஏற்­பாடு செய்­யலாம். சேமிப்பு இலக்­கிற்கு இது உதவும். ‘கிரெடிட் கார்டு’ பழக்கம் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் இருந்தால், ‘டெபிட் கார்­டு’க்கு மாறலாம்.

நண்­பர்­க­ளிடம் சொல்­லுங்கள்சேமிப்பு இலக்கை, உங்­க­ளுக்குள் வைத்­துக் ­கொள்­வ­தோ­டல்­லாமல், மற்­ற­வர்­க­ளுக்கு தெரி­விப்­பது நல்­லது. பெற்­றோர், சகோ­த­ரர்கள், நெருங்­கிய நண்­பர்­க­ளிடம் சேமிப்பு இலக்கு பற்றி கூறுங்கள். அவர்­க­ளிடம் சொல்லி விட்­டோமே எனும் எண்­ணமே உறு­தி­யுடன் சேமிக்க வைக்கும். அவர்­களும் அடிக்­கடி கேட்டு அழுத்தம் கொடுக்­கலாம். தேவை எனில் அறையில் சேமிப்பு இலக்கை எழு­தியும் வைக்­கலாம்.

ஜாலி­யாக சேமிக்­கவும்சேமிப்­பது என்­பது ஒரு சுமை­யாக இருக்க வேண்­டி­ய­தில்லை. அதற்­காக செலவு செய்­யா­மலே இருக்க வேண்டும் என்றும் அர்த்தம் இல்லை. எப்­போ­தேனும் ஒரு முறை தாரா­ள­மாக செலவு செய்து கொள்­ளலாம். அதே போல, சேமிப்பு இலக்கை கொஞ்சம் பொழு­து­போக்­கா­கவும் மாற்­றிக் ­கொள்­ளலாம். உதா­ர­ணத்­திற்கு, 50 ரூபாய் நோட்டு கையில் கிடைத்தால் செலவு செய்­யாமல் இருப்­பது எனும் வழக்­கத்தை பின்­பற்­றலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)