வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்!வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செலவு மிக்க பாலி­சி­களை தொடர்­வது அவ­சி­யமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
04:18

வரிச்­ச­லு­கையை மனதில் கொண்டு வாங்­கப்­பட்ட பாலிசி, செலவு மிக்­க­தாக விளங்கும் போது, அவற்றில் இருந்து வெளி­யே­று­வதை பரி­சீ­லனை செய்­வது சரி­யாக இருக்கும் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.

காப்­பீடு என்­பது முத­லீடு அல்ல, இரண்­டையும் ஒன்­றாக கலந்து பார்ப்­பது தவறு என்று சொல்­லப்­பட்­டாலும், முத­லீ­டா­கவும் கருதி பாலி­சி­களை வாங்­கு­வதே பர­வ­லான வழக்­க­மாக இருக்­கி­றது. காப்­பீடு மட்டும் அளிக்கும் பாலி­சியை விட, பாது­காப்­புடன் பலனும் அளிக்கும் பாலி­சி­களை நாடு­வது பொது­வான இயல்­பாக இருக்­கி­றது. மேலும் வரிச்­ச­லு­கைக்­கா­கவும், பாலி­சி­களை வாங்கும் பழக்கம் இருக்­கி­றது. யூலிப்கள், எண்­டோமென்ட் பாலிசி போன்­றவை வரி சேமிப்பு காலத்தில் பலரால் வாங்­கப்­ப­டு­கின்­றன. வரி சேமிப்­பிற்­கா­கவே, ஆண்­டு­தோறும் பல பாலி­சிகள் வாங்கி வைத்­தி­ருப்­ப­வர்­களும் இருக்­கின்­றனர்.

வரிச்­ச­லு­கைக்­காக பாலி­சிகள் வாங்­கு­வது சிறந்த வழியா எனும் கேள்வி ஒரு பக்கம் இருந்­தாலும், இந்த பாலி­சிகள் தரும் பலன்கள் போது­மா­னதா எனும் கேள்­வியை கேட்­டுக்­கொள்­வது அவ­சியம் என, நிதி வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். உதா­ர­ணத்­திற்கு, வரி சேமிப்­பிற்­காக வாங்­கப்­பட்ட ஒரு பாலி­சியை, சில ஆண்­டுகள் கழித்து பரி­சீ­லித்துப் பார்க்கும் போது, அது செலவு மிக்­க­தாக தோன்­றலாம் என்­கின்­றனர். அதா­வது, பாலிசி தரும் பலன் குறை­வா­கவும், அதற்­கான செலவு அதி­க­மா­கவும் இருப்­பதை உண­ரலாம். சில நேரங்­களில், செலவை கணக்கில் கொண்டு, ஈக்­விட்டி பண்ட் போன்ற மற்ற முத­லீட்டு வழி­க­ளுடன் ஒப்­பிட்டுப் பார்த்தால் பாலி­சியின் பலன் குறை­வாக இருப்­ப­தையும் உண­ரலாம் என்­கின்­றனர்.

வெளி­யேறும் வழி!
இது போன்ற சூழ்­நி­லையில், செலவு மிக்க பாலி­சியை விட்டு வெளி­யேறும் வாய்ப்பை பரி­சீ­லிப்­பது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தாக இருக்கும் என, நிதி வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். செலவு மிக்க பாலி­சி­களை ஒப்­ப­டைத்து வெளி­யே­றி­விட்டு, அந்த தொகையை வேறு வழி­களில் முத­லீடு செய்­யலாம் என்றும் வல்­லு­னர்கள் சொல்­கின்­றனர். சில நேரங்­களில் இவ்­வாறு செய்­வது இழப்பை ஏற்­ப­டுத்­தலாம்; ஆனால் தொடர்ந்து குறைந்த பலனை எதிர்­கொண்டு மொத்­த­மாக அதிகம் இழப்­பதை விட, ஓர­ளவு இழப்பை எதிர்­கொண்டு வெளி­யே­று­வது ஏற்­றது. இதன் மூலம் தேவை­யில்­லாத இழப்பை குறைத்­துக்­கொள்­ளலாம்.

யூலிப் ரக பாலி­சி­களை எடுத்­தி­ருப்­ப­வர்கள் சந்தை நில­வ­ரத்தை கவ­னித்து, ஏற்ற நிலையில் வெளி­யே­று­வது சரி­யாக இருக்கும் என்று கூறப்­பட்­டாலும், சந்தை நிலையை மட்­டுமே பரி­சீ­லித்தால் போதாது என்றும் கரு­தப்­ப­டு­கி­றது. பொது­வாக பாலி­சி­க­ளுக்கு லாக் இன் காலம் உண்டு. யூலிப்­களை பொறுத்­த­வரை, லாக் இன் காலத்­திற்கு முன் பாலி­சி­தாரர் வெளி­யேற தீர்­மா­னித்­தாலும், அவ­ருக்­கான மதிப்பு தொகையை வழங்­கு­வதில் தாமதம் செய்­யக்­கூ­டாது என காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு அண்­மையில் காப்­பீடு ஒழுங்­கு­முறை ஆணையம் சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளது. இது பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது.

கவ­னிக்க வேண்­டி­யவை
எனினும், பாலி­சியை ஒப்­ப­டைத்து வெளி­யேறும் முன் கவ­னிக்க வேண்­டிய விஷ­யங்கள் இருக்­கின்­றன. லாக் இன் காலம், வெளி­யே­று­வதால் ஏற்­படும் இழப்பு, சரண்டர் மதிப்பு, திட்­டத்தின் செயல்­பாடு ஆகிய அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்டும். முக்­கி­ய­மாக, பாலி­சியை விட்டு வெளி­யே­றி­னாலும் போதிய காப்­பீடு பாது­காப்பு இருக்­குமா என்றும் பார்க்க வேண்டும். வழக்­க­மான பாலி­சிகள் என்றால் சேர்ந்­துள்ள போன்ஸ் மற்றும் செலுத்த வேண்­டிய பிரீ­மியம் ஆகி­ய­வற்றை கவ­னிக்க வேண்டும்.

யூலிப்கள் எனில் ஐந்­தாண்­டு­க­ளுக்கு தொடர்ந்­து­விட்டு வெளி­யே­று­வதை பரி­சீ­லிக்­கலாம் என்­கின்­றனர். இவற்­றுக்­கான லாக் இன் காலம் ஐந்­தாண்­டுகள் அல்­லது தொடர்ச்­சி­யாக, மூன்று பிரீ­மி­யம்­க­ளுக்குப் பிறகு சரண்டர் மதிப்பு உண்­டா­கி­றது. 4வது மற்றும் 5வது பிரீ­மியம் செலுத்­தாமல் கூட, ஐந்­தாண்­டுக்கு பிறகு சரண்டர் செய்து பணம் பெறலாம். யூலிப் திட்­டங்கள், நிக­ரான மியூச்­சுவல் பண்ட் அல்­லது வேறு நிக­ரான திட்­டங்­க­ளுடன் ஒப்­பிடும் போது நீண்ட கால நோக்கில் குறை­வான பலனை அளித்தால் அவற்றை ஒப்­ப­டைத்­து­விட்டு வெளி­யே­று­வது பொருத்­த­மாக இருக்கும்.

எண்­டோமென்ட் திட்­டங்­களை பொறுத்­த­வரை, முதிர்வு காலம் அரு­கா­மையில் இருந்தால் அவற்றை தொட­ரலாம். இல்லை எனில், அவற்றை சரண்டர் செய்­து­விட்டு வெளி­யேறி அந்த தொகையை வேறு வழி­களில் முத­லீடு செய்­யலாம். சம் அஷ்­யூர்டு தொகை, திரும்பி கிடைக்கும் பலன் ஆகி­ய­வற்றை கணக்கு செய்து பார்க்க வேண்டும். வெளி­யே­று­வதால் ஏற்­படும் இழப்­பையும் கணக்­கிட்டு, அதை குறைக்கும் வழி இருக்­கி­றதா என்றும் பார்க்க வேண்டும்.

காப்­பீடு முக்­கிய அம்­சங்கள்:
• பாது­காப்பு அளிப்­பதே காப்­பீட்டின் பிர­தான அம்சம்.• காப்­பீடை முத­லீ­டாக கரு­து­வது சரி­யல்ல.• வரிச்­சே­மிப்பை மட்டும் மனதில் கொள்­ளக்­கூ­டாது.• பாலி­சியை பரா­ம­ரிப்­பது செல­வு­மிக்­கது எனில் வெளி­யே­றலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 12,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)