பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
03:18

மும்பை : தனியார் துறையைச் சேர்ந்த, பியூச்சர் ஜெனரலி இந்தியா நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனிஷ் சாரதா கூறியதாவது: சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வரும் பியூச்சர் குழுமம், சர்வதேச காப்பீட்டு நிறுவனமான, அசிகுராசியோனி ஜெனரலியுடன் இணைந்து, பியூச்சர் ஜெனரலி என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது.
காப்பீட்டு திட்டங்களை, டிஜிட்டல் முறையில் வழங்க, பல சேவைகள் துவக்கப்பட்டு வருகின்றன. மேலும், நடப்பாண்டில், புதிய நகரங்களில், 11 கிளைகள் துவக்கப்பட உள்ளன. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அதிக காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இதனால், ஆயுள் காப்பீட்டு சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|