பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
03:20

புதுடில்லி : சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கைவினைப் பொருட்கள், வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு, தற்போது, 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு, பொருட்களின் அடிப்படையில், 2, 3 மற்றும் 5 சதவீத, வரி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஜூலை, 1ல் அமலாகும், ஜி.எஸ்.டி.,யில், ஏற்றுமதியாளர்கள் முழு வரியை செலுத்திய பின்னே, தள்ளுபடியை பெற முடியும் என்பதால், வர்த்தக செலவு அதிகமாகும். அவர்களின் நடைமுறை மூலதனம், 1.85 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசிடம் முடங்கும் என, தெரிகிறது.
எனவே, ‘வட்டி மானியம் மற்றும் வரி தள்ளுபடியை தலா, 2 சதவீதம் அதிகரிக்க வேண்டும்’ என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய வர்த்தக அமைச்சகம், அன்னிய வர்த்தக கொள்கையின் கீழ், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான வட்டி மானியத்தை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை, விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|