பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
03:20

புதுடில்லி : ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ள, வி.எஸ்.எஸ்., எனப்படும், விருப்ப பிரிவு திட்டம், வரும், 15ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜி.எம்., என, சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ‘பீட், செயில், ஸ்பார்க், க்ரூஸ்’ உள்ளிட்ட கார்களை, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், இந்தாண்டு ஏப்ரலில், ஹலோல் தொழிற்சாலையை மூடியது. இதையடுத்து, மே, 18ல், ‘இந்தியாவில், இந்தாண்டு இறுதியுடன் கார் விற்பனை நிறுத்தப்படும்; தாலேகான் தொழிற்சாலையில் இருந்து, கார் ஏற்றுமதி மட்டுமே மேற்கொள்ளப்படும்’ என, அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
மறுநாளே, தொழிலாளர்களுக்கு விருப்ப பிரிவு திட்டத்தை அறிவித்த, ஜி.எம்., அதற்கான கெடு நாள், ஜூன், 15 என, அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், நிறுவனத்தின் நிர்வாகம், சந்தைப்படுத்துதல், விற்பனை, நிதி ஆகிய பிரிவுகளில், 250 பேர் வெளியேறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வி.எஸ்.எஸ்.,சில், ஒரு பணியாண்டுக்கு, 45 நாட்கள் ஊதியம் என்ற விகிதத்தில், ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்க உள்ளது. ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு, ஓய்வு காலம் வரையிலான ஊதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான கெடு முடிய, இன்னும் இரு நாட்களே உள்ளன.
மூடப்பட்ட ஹலோல் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., எனப்படும், தன் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், பணியாண்டுக்கு, 40 நாட்கள் வீதம் ஊதியம் கணக்கிடப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 100 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|