பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:49

மும்பை : இந்தியாவில், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம், ‘பெஸ்ட் டீல்’ என்ற பெயரில், பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்கிறது. சமீபத்தில், ஹோண்டா, தன், 150வது பெஸ்ட் டீல் மையத்தை, கோவையில் துவக்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், 21 மாநிலங்களில், 117 நகரங்களில், பெஸ்ட் டீல் விற்பனை மையங்களை நடத்தி வருகிறது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, பி.எஸ்., – 4 கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், இருசக்கர வாகன துறைக்கு, கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
தற்போது, பயன்படுத்திய வாகனங்கள் விற்பனை சந்தை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில், பெஸ்ட் டீல் மையங்களின் எண்ணிக்கையை, 200 ஆக அதிகரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|