பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:50

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, யு.பி.எஸ்., எவிடன்ஸ் லேப் நிறுவனம், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆசிய நாடுகளில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
இது தொடர்பாக, இந்தாண்டு, மார்ச் – ஏப்., மாதங்களில், 500 கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களிடம், அடுத்த ஓராண்டிற்கான முதலீட்டு திட்டங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில், 40 சதவீத நிறுவனங்களின் தலைவர்கள், சீனாவில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக, 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட, சீனா மற்றும் இந்தியாவில் அதிக முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளன. அமெரிக்க நிறுவனங்கள், மேற்கு ஐரோப்பாவில், அதிகளவில் அன்னிய நேரடி முதலீடு களை மேற்கொண்டு உள்ளன. அவற்றின் மொத்த முதலீட்டில், சீனா மற்றும் இந்தியாவின் பங்கு, 2 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|