பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:51

புதுடில்லி : சி.ஐ.டி.ஐ., எனப்படும், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர், ஜே.துளசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சில தினங்களுக்கு முன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் கூடிய, ஜி.எஸ்.டி., கவுன்சில், ஜவுளி, வைரம் பட்டை தீட்டுதல், தோல், ஆபரணம் மற்றும் அச்சக துறைகளில், வெளியாருக்கு பணிகளை செய்து தரும் சேவைகளுக்கான வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், பெரிய நிறுவனங்களுக்கு ஜவுளி நுாலிழை, துணி ஆகியவற்றை தயாரித்து தரும் நிறுவனங்கள் வளர்ச்சி காணும்.
அது போல, படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை உள்ளிட்ட ஜவுளிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றை தயாரித்து ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கும், சேவை வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அதிக வரி காரணமாக, சர்வதேச சந்தையில், இந்திய ஆடைகள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஆகவே, வரியை உடனடியாக குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|