மும்பை தாஜ் மகால் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமைமும்பை தாஜ் மகால் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.64 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.64 ...
இந்தியா தலைமையில் ‘சார்க்’ நாடுகளின் ‘ஸ்டார்ட் அப்’ தொழில் துறை மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
23:46

புதுடில்லி : இந்­தியா, தெற்­கா­சிய பிராந்­திய நாடு­க­ளின், ‘ஸ்டார்ட் அப்’ தொழில் துறை மாநாட்டை, வரும் டிசம்­ப­ரில் நடத்த திட்­ட­மிட்டு உள்­ளது.

இந்த மாநாடு, ஸ்டார்ட் அப் துறை­யில் புதிய உத்­தி­கள், வர்த்­தக வாய்ப்­பு­கள், முத­லீட்டு திட்­டங்­கள் ஆகி­யவை குறித்த பரஸ்­பர விவா­தத்­திற்­கும், வளர்ச்­சிக்­கும் பெரி­தும் உத­வும். வலை­த­ளங்­களில் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘பிளிப்­கார்ட், ஓலா, ஸ்நாப்­டீல்’ போன்­றவை, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் என, அழைக்­கப்­ப­டு­கின்­றன.

ஸ்டார்ட் அப் துறை சார்ந்த அனைத்து விப­ரங்­க­ளை­யும், ஒரே இடத்­தில் அறிந்து கொள்ள, ‘ஸ்டார்ட் அப் இந்­தியா விர்ச்­சு­வல் ஹப்’ என்ற பிரத்­யேக வலை­த­ளத்தை, மத்­திய அரசு உரு­வாக்கி உள்­ளது. இதை, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்சர், நிர்­மலா சீதா­ரா­மன் துவக்கி வைத்து பேசி­ய­தா­வது:

ஸ்டார்ட் அப் துறை­யில் உள்ள அனை­வ­ரும் ஒரே இடத்­தில் கூடி, கருத்­துக்­களை பரி­மா­றிக் கொண்டு, பரஸ்­பர வளர்ச்சி காணும் சந்­தையை உரு­வாக்க உள்­ளோம். அதன் ஒரு பகு­தி­யாக, தற்­போது, இந்த வலை­த­ளம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இதில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், முத­லீட்­டா­ளர்­கள், நிதி நிறு­வ­னங்­கள், வர்த்­தக வாய்ப்­பு­கள், வல்­லு­னர்­க­ளின் ஆலோ­ச­னை­கள், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை உரு­வாக்­கும் வளர்ப்­ப­கங்­கள், அரசு உத­வி­கள் குறித்த அனைத்து விப­ரங்­க­ளை­யும் பெற­லாம்.

ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை உரு­வாக்­கு­வ­தில் பயிற்சி பெற­வும், நிதி­யு­தவி கோர­வும், இத்­த­ளம் வாய்ப்­ப­ளிக்­கிறது. ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை துவக்க விரும்­பும் தொழில்­மு­னை­வோ­ருக்கு, எம்.பி., தொகுதி மேம்­பாட்டு நிதி­யின் கீழ் உத­வு­மாறு, அனைத்து, எம்.பி.,க்க­ளுக்­கும் கடி­தம் எழுத உள்­ளேன். இத்­திட்­டத்­தில், நான், மங்­க­ளூ­ரில், ஸ்டார்ட் அப் பணிக்­கூ­டத்தை அமைக்க நிதி ஒதுக்கி உள்­ளேன்.

‘அடல் புதுமை திட்­டம்’ மூலம், தேர்ந்­தெ­டுத்த பள்­ளி­களில், ஆய்­வுக் கூடங்­கள் அமைக்­க­வும் அமைச்­ச­கம் திட்­ட­மிட்­டுள்­ளது. இந்­தியா – ஜெர்­மனி இடையே, ஸ்டார்ட் அப் உத்­தி­களை பரஸ்­ப­ரம் பரி­மா­றிக் கொள்­வ­தற்­கான பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அது போல, ‘சார்க்’ நாடு­கள் உட­னும், ஸ்டார்ட் அப் துறை சார்ந்த கருத்­துக்­களை பகிர்ந்து கொண்டு, பரஸ்­ப­ரம் முன்­னேற வழி காணப்­படும்.

இதற்­காக, இந்­தியா தலை­மை­யில், ‘சார்க்’ நாடு­க­ளின் ஸ்டார்ட் அப் மாநாடு நடத்த முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இது குறித்த கருத்­துக்­களை, அடுத்த இரு மாதங்­களில், வர்த்­தக அமைச்­ச­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தி­னால், டிசம்­ப­ரில் மாநாடு நடத்­த­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

‘சார்க்’ எனப்­படும், தெற்­கா­சிய பிராந்­திய கூட்­ட­மைப்­பில், இந்­தியா, பாகிஸ்­தான், இலங்கை, வங்­க­தே­சம், நேபா­ளம், மாலத்­தீவு, பூடான், ஆப்­கா­னிஸ்­தான் ஆகி­யவை இடம் பெற்­றுள்­ளன.

உல­க­ள­வில் அதிக, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் உள்ள நாடு­களில், அமெ­ரிக்கா, பிரிட்­டனை தொடர்ந்து, இந்­தியா மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 20,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)