பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
00:31

புதுடில்லி : ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தாலேகான் ஆலையில் தயாரான, பீட் ரக கார்களை, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.
அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு, இந்தியாவில் போதிய வரவேற்பு இல்லாததால், அதன் விற்பனை சரிவுக்குள்ளானது. இதையடுத்து இந்நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனையை, இந்த ஆண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இருப்பினும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, முதற்கட்டமாக, தாலேகான் தொழிற்சாலையில் தயாரான, 1,200 செவர்லே பீட் கார்களை, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் முகவர்களை பொறுத்தவரை, அவர்கள் இழப்பீடு விஷயத்தில் அதிருப்தி இருப்பதாகவும், இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும், 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பதால், அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|