பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
00:35

புதுடில்லி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான – எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ‘ஆர்கானிக்’ உணவுப் பொருட்களுக்கான வரைவு விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மரபணு மாற்ற விதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல், இயற்கை உரம், விதைகள் மூலம் விளைவிக்கப்படுபவை, ஆர்கானிக் உணவுப் பொருட்கள் என, அழைக்கப்படுகின்றன. தற்போது, நாடு முழுவதும் இது போன்ற இயற்கை உணவுப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆனால், நுகர்வோருக்கு, அந்த உணவுப் பொருட்கள் உண்மையாகவே, இயற்கை விவசாய முறையில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளனவா என்ற விபரம் தெரிவதில்லை; அதற்கான விதிமுறைகளும் இல்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வாக, ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கு, வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளதாக, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்து உள்ளது. இதன்படி, ஆர்கானிக் உணவுப் பொருட்களின் அட்டையில், அதன் உற்பத்தி உள்ளிட்ட முழு விபரங்களும் இடம் பெற வேண்டும். அத்துடன், குறிப்பிட்ட அமைப்புகளிடம் பெற்ற தரச் சான்று அல்லது அத்தாட்சி குறியீடு இருக்க வேண்டும். இந்த விதிமுறை, இயற்கை விவசாய பொருட்களை உற்பத்தி செய்வோர், நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு பொருந்தாது. அதே சமயம், பதப்படுத்தப்பட்ட இயற்கை உணவுகளுக்கு தரச் சான்று விபரங்கள் அவசியம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இயற்கை வேளாண் முறையிலான சாகுபடி, ஆர்கானிக் விவசாயம் எனவும், நிர்ணயிக்கப்பட்ட தரத்தில், ஆர்கானிக் விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள் எனவும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வரையறை செய்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகள், பொதுமக்கள் கருத்து கேட்புக்காக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|