‘ஆர்கானிக்’ உணவு பொருட்களுக்கு வரைவு விதிமுறைகள் வெளியீடு‘ஆர்கானிக்’ உணவு பொருட்களுக்கு வரைவு விதிமுறைகள் வெளியீடு ... இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு ... ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
00:38

ஐயா, நான், கிருஷ்ணா டிரே­டிங் எனும் பெய­ரில், தொழில் செய்து வரு­கி­றேன். நான் இது­வரை, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­ய­வில்லை. என்­னால், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய முடி­யுமா?–தாமோ­த­ரன், சென்னைமுடி­யாது. ஜி.எஸ்.டி., பதிவு செய்­யாத ஒரு நபர், அவ­ரு­டைய வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து, ஜி.எஸ்.டி., வரியை வசூ­லிக்க முடி­யாது. நீங்­கள், ஜி.எஸ்.டி.,யில் செலுத்­திய உள்­ளீட்டு வரியை பெறு­வ­தற்கு உரிமை கோர­வும் முடி­யாது.

ஜி.எஸ்.டி., எந்த வித­மான பொருட்­கள் மீது விதிக்­கப்­படும்?– சித்ரா, சென்னைஅனைத்து வித­மான பொருட்­கள் மற்­றும் சேவை­களின் மீது, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும் (மனித நுகர்வு மது­பா­னம் தவிர). குறிப்­பிட்ட பெட்­ரோ­லிய பொருட்­கள் (கச்சா எண்­ணெய், பெட்­ரோல், டீசல், விமான எரி­பொ­ருள் மற்­றும் இயற்கை எரி­வாயு) மீது, ஜி.எஸ்.டி., கவுன்­சில் பரிந்­து­ரைக்­கும் நாள் முதல், ஜி.எஸ்.டி., வசூ­லிக்­கப்­படும். (மேற்­கு­றிப்­பிட்ட பொருட்­கள், ஜி.எஸ்.டி., வரம்­பில் இல்லை). புகை­யிலை மற்­றும் புகை­யிலை பொருட்­களின் மீது, ஜி.எஸ்.டி., வசூ­லிக்­கப்­படும். மேலும், அவற்­றிற்கு மத்­திய அர­சால் விதிக்­கப்­படும் கலால் வரி­யும் தொட­ரும்.
நான் புதி­தாக, ஜி.எஸ்.டி., பதிவு செய்ய விரும்­பு­கி­றேன். அதற்­கான விண்­ணப்­பத்தை எங்கு பெற வேண்­டும்? எவ்­வ­ளவு கட்­ட­ணம் செலுத்த வேண்­டி­ய­தி­ருக்­கும்?– ராஜேஷ், திருப்­பூர்புதி­தாக, ஜி.எஸ்.டி., பதிவு செய்­ப­வர்­கள், படி­வம், ஜி.எஸ்.டி., REG- 01ல், மின்­னணு முறை­யில், https://www.gst.gov.in இணை­ய­த­ளத்­தில் விண்­ணப்­பிக்க வேண்­டும். ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை பெற கட்­ட­ணம் எது­வு­மில்லை.
நான் தமி­ழ­கத்­தில், 6 நக­ரங்­களில் விற்­பனை நிலை­யங்­கள் வைத்­துள்­ளேன். நான் ஒரு, ஜி.எஸ்.டி., எண் பெற்­றால் போதுமா அல்­லது அனைத்து விற்­பனை நிலை­யங்­க­ளுக்­கும் பதிவு எண் பெற வேண்­டுமா?– ஹரிஷ், கோவைநீங்­கள் ஒரே ஒரு பதிவு எண் பெற்­றால் போதும். வேறு மாநி­லத்­தில் விற்­பனை நிலை­யம் உங்­க­ளுக்கு இருந்­தால், அதற்கு, அந்த மாநி­லத்­தில், ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற வேண்­டும்.
நான், ஓர் அறக்­கட்­ட­ளையை நிர்­வ­கித்து வரு­கி­றேன். அறக்­கட்­டளை மூலம் வழங்­கப்­படும் பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­ப­டுமா?– ராஜா­ராம், சேலம், திருப்­பூர்அறக்­கட்­டளை மூலம் வழங்­கும் பொருட்­கள் வணிக நோக்­கு­டன் வழங்­கப்­பட்­டால், ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­படும். வணிக நோக்­கம் இல்­லை­யேல், வரி விதிக்­கப்­ப­டாது.
இல­வச பரி­சு­களை வழங்­கி­னால், அதற்­கும், ஜி.எஸ்.டி., உண்டு என, சிலர் சொல்­கின்­ற­னர். இதை பற்றி தெளி­வு­ப­டுத்­த­வும்.– ராகிணி, சென்னைஇல­வச பரி­சு­களை தொடர்பு அல்­லாத நபர்­க­ளுக்கு வழங்­கும் போது, ஜி.எஸ்.டி., இல்லை. ஆனால், அத்­த­கைய பொருட்­க­ளுக்கு உள்­ளீட்டு வரிச்­ச­லுகை பெற இய­லாது.
பொருட்­களின், ஜி.எஸ்.டி., வரி விகி­தத்தை எவ்­வாறு தெரிந்து கொள்ள முடி­யும்?– கார்த்­திக், மயி­லாப்­பூர்ஒவ்­வொரு பொரு­ளும், HSN Code மூலம் பிரித்­துள்­ள­னர். அவற்­றுக்­கான வரி விகி­தத்தை, www.cbec.gov.in எனும் இணை­ய­த­ளத்­தில் பெற­லாம்.
ஏற்­று­மதி மற்­றும் இறக்­கு­மதி மீது, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?– சார்­லஸ், சென்னைஏற்­று­மதிக்கு பூஜ்ஜிய வரி என்பதால் (0% rated supply ) அதன் மீது வரிச்­சுமை இருக்­காது. இறக்­கு­மதி (ஐ.ஜி.எஸ்.டி., சப்ளை ) என கரு­தப்­பட்டு, அதன் மீது, 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)