பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
10:49

மும்பை : சர்வதே சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவும், ஜூன் மாத பங்கு ஒப்பந்தம் நாளையுடன் காலாவதி ஆவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 28) சரிவுடன் துவங்கி உள்ளன. நிப்டி மீண்டும் 9500 புள்ளிகளுக்கு கீழ் சரிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 76.62 புள்ளிகள் சரிந்து 30,881.63 புள்ளிகளாகவும், நிப்டி 31.60 புள்ளிகள் சரிந்து 9479.80 புள்ளிகளாகவும் உள்ளன. ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதால், விலை மற்றும் வரி விகிதம் உயரும் என்பதால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
ஆசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, ஐடிசி லிமிடெட், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|