இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.55இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.55 ... ‘பெட்யா வைரஸ்’ தாக்குதலில் மும்பை துறைமுகம் பாதிப்பு ‘பெட்யா வைரஸ்’ தாக்குதலில் மும்பை துறைமுகம் பாதிப்பு ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
04:43

நான், திருப்­பூ­ரில் ஜாப் ஒர்க் எடுத்து செய்து வரு­கி­றேன். என் போன்ற ஜாப் ஒர்க் எடுத்து செய்­ப­வர்­கள், கட்­டா­யம், ஜி.எஸ்.டி., பதிவு செய்­தாக வேண்­டுமா?– மால்­வண்­ணன், திருப்­பூர்
ஜாப் ஒர்க் ஒரு சேவை என்­ப­தால், உங்­க­ளது மொத்த வரு­மா­னம், ஜி.எஸ்.டி., வரிக்­கான ஆரம்ப நிலை­யான, 20 லட்­சம் ரூபாயை விட அதி­க­மாக இருக்­கும்­பட்­சத்­தில், நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவை கண்­டிப்­பாக மேற்­கொள்ள வேண்­டும். உங்­க­ளது மொத்த வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்கு குறை­வாக இருக்­கும்­பட்­சத்­தில், நீங்­கள் பதிவு செய்ய வேண்­டிய தேவை­யில்லை.

விற்­ப­னைக்கு பின் தள்­ளு­படி வழங்­கி­னால், அதற்­கான, ஜி.எஸ்.டி., வரியை குறைத்து கொள்ள முடி­யுமா?– சாஹிப், ஆரணி
முடி­யும். பொருள் வாங்­கு­ப­வ­ரும், தன் உள்­ளீட்டு வரியை (இன்­புட் டேக்ஸ்) குறைத்­துக் கொண்­டால், நீங்­கள் தள்­ளு­ப­டிக்­கான, ஜி.எஸ்.டி., வரியை குறைத்து கொள்­ள­லாம்.
​​என் விற்­பனை பட்­டி­ய­லில், சி.ஜி.எஸ்.டி., மற்­றும் எஸ்.ஜி.எஸ்.டி., சேர்த்து வசூ­லித்­தால், அவற்றை மத்­திய மற்­றும் மாநில அர­சிற்கு தனித்­த­னியே செலுத்த வேண்­டுமா?– கிருஷ்­ணன், கோவில்­பட்டி
வேண்­டாம். நீங்­கள் வசூ­லித்த, மத்­திய மற்­றும் மாநில, ஜி.எஸ்.டி., (சி.ஜி.எஸ்.டி., + எஸ்.ஜி.எஸ்.டி.,) வரியை, உள்­ளீட்டு வரி பயன் பெற்று, மீத­முள்ள தொகையை, ‘ஆன்­லைன்’ மூலம் செலுத்­த­லாம். நீங்­கள் செலுத்த வேண்­டிய வரி மாதம், 10 ஆயி­ரம் ரூபாய்க்கு மிகா­மல் இருந்­தால், வங்கி மூலம் பண­மாக செலுத்­த­லாம்.
​நான், ஜாப் ஒர்க் பணிக்­காக, மூல­தன பொருட்­களை அனுப்பி உள்­ளேன். ஜூலை, 1ல், அத்­த­கைய பொருட்­களை திரும்ப எடுத்து கொள்ள வேண்­டுமா? இல்­லை­யேல், அதற்­கும், ஜி.எஸ்.டி., உண்டு என, கூறு­கின்­ற­னர். இதை பற்றி விளக்­க­மாக கூற­வும்.– விமல், ஓசூர்
ஜூலை, 1ம் தேதியே, நீங்­கள் பொருட்­களை திரும்ப பெற்­றுக் கொள்ள வேண்­டிய தேவை­யில்லை. ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­து­வ­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட நாளான, ஜூலை, 1லிருந்து ஆறு மாதங்­க­ளுக்­குள், உற்­பத்­தி­யா­ள­ரின் தொழில் நடக்­கும் இடத்­துக்கு, திரும்­பக் கொண்டு வந்து சேர்க்க வேண்­டும் என, விதி உள்­ளது. அவ்­வாறு சேர்க்­க­வில்­லை­யெ­னில் மட்­டுமே, அந்த பொருட்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., வரி உற்­பத்­தி­யா­ள­ரி­ட­மி­ருந்து பெறப்­படும்.
​​என் நிறு­வ­னம், மத்­திய சேவை வரி சட்­டத்­தின் கீழ் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளது. மாநில வரி­யான, எஸ்.ஜி.எஸ்.டி., வசூல் செய்ய, ‘வாட்’ வரிக்­காக ​புதி­தாக பதிவு செய்ய வேண்­டுமா?– ராஜ­சே­க­ரன், அரக்­கோ­ணம்
அவ­சி­ய­மில்லை. வரி செலுத்­து­ப­வர் அல்­லது விற்­ப­னை­யா­ளர் அனை­வ­ருமே, ஜி.எஸ்.டி.,யில், புர­வி­ஷ­னல் ஐ.டி., மூலம், ஜி.எஸ்.டி.ஐ.என்., நெட்­வொர்க்­கிற்கு மாற முடி­யும்.

​நான், ஜி.எஸ்.டி.,யில் புர­வி­ஷ­னல் ஐ.டி., பெற்று விட்­டேன். என் விற்­பனை பட்­டி­ய­லில் பொருட்­கள் வாங்­கு­ப­வ­ரின், ஜி.எஸ்.டி., எண்ணை கட்­டா­யம் குறிப்­பிட வேண்­டுமா? அவர், ஜி.எஸ்.டி., எண் பெற­வில்லை என்­றால், எனக்கு பாதிப்பு உண்டா? தய­வு­கூர்ந்து விளக்­க­வும்.– ராஜன் டோமி­னிக், நாமக்­கல்
நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நப­ருக்கு விற்­பனை செய்­தால், அவ­சி­யம், அவ­ரின், ஜி.எஸ்.டி., எண்ணை (ஜி.எஸ்.டி.ஐ.என்.,) உங்­க­ளது விற்­பனை பட்­டி­ய­லில் குறிப்­பிட வேண்­டும். அவ்­வாறு குறிப்­பிட்­டால் மட்­டுமே, வாங்­கு­ப­வ­ரால் உள்­ளீட்டு வரி பயனை பெற முடி­யும்.நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு பெறாத நப­ருக்கு விற்­பனை செய்­தால், ஜி.எஸ்.டி., எண்ணை ​குறிப்­பிட முடி­யாது. அவ்­வ­ளவு தான். மற்­ற­படி, அத­னால் உங்­க­ளுக்கு எந்த பாதிப்­பும் இல்லை.
​ஐயா, நாங்­கள் மெட்­ரிக்­கு­லே­ஷன் பள்ளி ஒன்றை நடத்தி வரு­கி­றோம். கல்வி சேவை­யும், ஜி.எஸ்.டி., வரம்­பிற்­குள் வருமா?– இன்­ப­ராஜ், சென்னை
பள்­ளிக்​கல்வி சேவைக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. எனி­னும், கல்­விச் சேவை ​அல்­லாத சில சேவை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு உண்டு. ​
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)