மாலை நேர நிலவரம் ; தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வுமாலை நேர நிலவரம் ; தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ... நால்கோ தனியார்மயமாகிறதா: மத்திய அமைச்சகம் விளக்கம் நால்கோ தனியார்மயமாகிறதா: மத்திய அமைச்சகம் விளக்கம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
00:49

ஐயா, நான், என் ஒரு கிளை­யி­லி­ருந்து, வேறொரு கிளைக்கு சரக்­கு­களை அனுப்­பும் போது, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­ப­டுமா?– ராம் கோபால், நாகை
ஒரே மாநி­லத்­தில், கிளை­க­ளுக்கு சரக்­கு­களை இட­மாற்­றம் செய்­யும் போது, ஜி.எஸ்.டி., வரி­யில் விலக்கு அளிக்­கப்­படும். வேறொரு மாநி­லத்­தில் உள்ள கிளைக்கு, சரக்­கு­களை அனுப்­பும் போது மட்­டுமே, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.
தற்­போது, மூல­தன பொருட்­கள் (கேப்­பிட்­டல் குட்ஸ்) வாங்­கும் போது, 50 சத­வீ­தம் உள்­ளீட்டு வரி சலுகை முதல் ஆண்­டி­லும், மீதத்தை இரண்­டாம் ஆண்­டி­லும் எடுத்­துக் கொள்­கி­றோம். ஜி.எஸ்.டி., வரி அமைப்­பில், மூல­தன பொருட்­களின் உள்­ளீட்டு வரி சலு­கை­யில் மாற்­றம் இருக்­கி­றதா?– பார்­கவி, சேலம்
ஆம். ஜி.எஸ்.டி., வரி அமைப்­பில், மூல­தன பொருட்­களின் உள்­ளீட்டு வரி சலு­கை­யில், 100 சத­வீ­தத்தை முதல் ஆண்­டி­லேயே பெற்று விட­லாம்.
தற்­போது நாங்­கள், இ.ஓ.யூ., யூனிட்­டிற்கு சப்ளை செய்­கி­றோம். ஜி.எஸ்.டி., வரி­யில், இத்­த­கைய சப்­ளைக்கு ஏதா­வது சலுகை உள்­ளதா?– தீன­த­யாள், சென்னை
இல்லை. இ.ஓ.யூ., யூனிட்­டிற்கு சப்ளை செய்­தா­லும், அது சாதா­ரண வழங்­கல்­க­ளாக கருத்­தில் கொண்டு வரி விதிக்க வேண்­டும்.
சார், நான் பதிவு செய்­யாத நப­ரி­ட­மி­ருந்து வாங்­கும் அனைத்து பொருட்­க­ளுக்­கும், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ உண்டா? இதில் ஏதா­வது சலுகை உள்­ளதா?– ரவி, ஈரோடு
ஜி.எஸ்.டி., பதிவு செய்த நபர், பதிவு செய்­யாத நப­ரி­ட­மி­ருந்து வாங்­கும் அனைத்து பொருட்­கள் மற்­றும் சேவைக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ உண்டு. ஆனால், ஒரு நாளைக்கு அத்­த­கைய மொத்த சப்­ளை­யின் மதிப்பு, 5,000 ரூபாய்க்கு மிகா­மல் இருந்­தால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் கூட வரி செலுத்த வேண்­டாம்.
நாங்­கள், ‘ஸ்பெ­ஷல் எக­னா­மிக் ஸோன்’ என, சொல்­லப்­ப­டக்­கூ­டிய, எஸ்.இ.இசட்., யூனிட்­டிற்கு சப்ளை செய்­தால், எவ்­வ­ளவு சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்? விளக்­க­மாக கூற­வும். – பிர­காஷ், ஓசூர்
சரக்­கு­கள் அல்­லது சேவை­களை, எஸ்.இ.இசட்., யூனிட்­டிற்கு அல்­லது எஸ்.இ.இசட்., டெவ­லப்­பர்­க­ளுக்கு வழங்­கி­னால், அது ஏற்­று­ம­தி­யாக கருத்­தில் கொண்டு, ​அதன் மீது, பூஜ்­ஜிய சத­வீத வரி விதிக்­கப்­படும்.
தற்­போது சேவை வரி­யின் கீழ், 6 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை ரிட்­டர்ன் எஸ்.டி., 3 படி­வத்­தில் தாக்­கல் செய்­கி­றோம். 2017 ஏப்., – ஜூன் வரை­யி­லான ரிட்­டர்னை, எவ்­வாறு தாக்­கல் செய்ய வேண்­டும்?– களஞ்­சி­யம், தேனி
நீங்­கள், 2017 ஏப்., – ஜூன் வரை­யி­லான, சேவை வரி ரிட்­டர்னை, எஸ்.டி., 3 படி­வத்­தில், ஆக., 15க்குள் தாக்­கல் செய்ய வேண்­டும். தாக்­கல் செய்த நாள் முதல், 45 நாட்­க­ளுக்­குள், தாக்­கல் செய்த படி­வத்தை திருத்­தம் செய்து கொள்­ள­வும் அவ­கா­சம் அளித்­துள்­ள­னர்.
நான், தற்­போது, ‘வாட்’ பதிவு பெற­வில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., பதிவு செய்­தால், 2017 ஜூன், 30ல் உள்ள கையி­ருப்பு சரக்­கிற்கு, ‘வாட்’ மற்­றும் கலால் வரிச்­ச­லுகை பெற­லாம் என, கூறு­கின்­ற­னர். இது சாத்­தி­யமா?– அசோ­கன், கட­லுார்
ஆம். ஜி.எஸ்.டி., வரி சட்­டத்­தில் இந்த சாத­க­மான விதி உள்­ளது. தற்­போது, ‘வாட்’ பதிவு பெறா­விட்­டால் கூட, ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்­டால், 2017 ஜூன், 30ல் உள்ள கையி­ருப்பு சரக்­கிற்கு, நீங்­கள் சரக்கை வாங்­கும் போது செலுத்­திய, ‘வாட்’ மற்­றும் கலால் வரியை, உள்­ளீட்டு சலு­கை­யாக பெற­லாம்.
இந்த சலுகை பெற முக்­கிய நிபந்­த­னை­கள்: 2017 ஜூன், 30ல் உள்ள கையி­ருப்பு சரக்கு, வாங்­கிய தேதி, 12 மாதங்­க­ளுக்­குள் இருக்க வேண்­டும். வரி செலுத்­திய ஆவ­ணம் இருக்க வேண்­டும். (ஒரு­வேளை வரி செலுத்­திய ஆவ­ணம் இல்­லை­யென்­றா­லும் கூட, 60 சத­வீ­தம் வரை, உள்­ளீட்டு வரி சலுகை பெற, சட்­டத்­தில் வழி­வகை செய்­யப்­பட்டுள்­ளது)
‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி விதிப்பு என்­றால் என்ன?– அனிதா, சென்னை
ஜி.எஸ்.டி., பதிவு செய்­யப்­பட்ட நபர், பதிவு செய்­யப்­ப­டாத நப­ரி­ட­மி­ருந்து சரக்­கு­க­ளையோ அல்­லது சேவை­யையோ பெற்­றால், சப்­ளையை பெறு­ப­வ­ருக்கு வரி செலுத்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது. இது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி விதிப்பு என, கூறப்­ப­டு­கிறது.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)