பதிவு செய்த நாள்
01 ஜூலை2017
00:51

பி.எம்.டபிள்யு., கார் நிறுவனம், மும்பையில் நேற்று முன்தினம், புதிய, 5 சீரிஸ் கார்களை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை, 49.90 லட்சம் ரூபாய்.
நுாறு ஆண்டு கால, ‘பவேரியன் மோட்டார் ஒர்க்ஸ்’ என்பதன் சுருக்கமான, பி.எம்.டபிள்யு., ஜெர்மனி கார் நிறுவனம், இந்திய சந்தையில் நுழைந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன.
பி.எம்.டபிள்யு., கார்ஸ், பி.எம்.டபிள்யு., மோட்டாராட் மற்றும் மினி என, மூன்று பிராண்டுகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம், நேற்று முன்தினம், தன், 5 சீரிஸ் பிரிவில், ‘ஸ்போர்ட்ஸ் லைன், லக்சரி லைன், எம் – ஸ்போர்ட்ஸ்’ கார்களை அறிமுகம் செய்தது.
மும்பை, வோர்லியின், சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான அறிமுக விழாவில், இந்நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா, 5 சீரிஸ் கார்களை அறிவித்தார்; முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்தார்.
இந்த கார்களின் துவக்க விலை, 49.90 லட்சம் ரூபாய்; அதிகபட்ச விலை, 61.30 லட்சம் ரூபாய்.‘இன்போன்டெயின்மென்ட் ஸ்கிரீன், வாய்ஸ் கன்ட்ரோல், கெஸ்ச்சர் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல், ஐ – டிரைவர்’ போன்ற பல அதிநவீன வசதிகளை, இந்த கார்கள் கொண்டுள்ளன.
66 ஆயிரம் கார்கள் விற்பனை:
பி.எம்.டபிள்யு., நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு, எட்டு கார்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்நிறுவனம், 1,250 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. கடந்த மே வரை, 3,532 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், 66 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளன.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|