பதிவு செய்த நாள்
01 ஜூலை2017
00:53

புதுடில்லி : எல் அண்டு டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, இன்று பதவி ஏற்க இருக்கிறார், எஸ்.என்.சுப்ரமணியன்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், எல் அண்டு டி என்றழைக்கப்படும், ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம், இந்திய தொழில் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
இந்நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி மற்றும் குழு நிர்வாக தலைவராக இருக்கும், ஏ.எம்.நாயக், செப்டம்பருடன் ஓய்வு பெற இருப்பதையடுத்து, சுப்ரமணியன் இந்த பொறுப்புக்கு வருகிறார். ஏப்., 7ல் நடைபெற்ற இயக்குனர்கள் குழு சந்திப்பில், சுப்ரமணியனின் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சுப்ரமணியன், தற்போது துணை நிர்வாக இயக்குனராக உள்ளார்.
ஏம்.எம்.நாயக், 52 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், 17 ஆண்டுகளாக, தலைமை பொறுப்பேற்று, எல் அண்டு டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். முதல், 21 ஆண்டு களில், அவர் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை என்பது, இன்னொரு சிறப்பு. நாயக், செப்., 30ல், ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அக்., 1லிருந்து மூன்று ஆண்டுகளுக்கு, அவர் செயல்சாரா இயக்குனராக இருப்பார். மேலும், புதிய தலைமைக்கு தொடர்ந்து வழிகாட்டி உதவ வேண்டும் என, அவரிடம் நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
சுப்ரமணியனின் நியமனம் குறித்து, நாயக் கூறியதாவது: சுப்ரமணியன், பணிகளில் நன்னெறியும், வணிகத்தில் புத்திசாலித்தனமும் கொண்டவர். அவரது தலைமையின் கீழ், எல் அண்டு டி மேலும் பல உச்சங்களை தொடும். பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும், நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகளை காப்பாற்றுவதிலும், வலிமையான இந்தியாவை உருவாக்குவதிலும், அவர் மகத்தான பணியாற்றுவார். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
புதிய பதவி குறித்து, சுப்ரமணியன் கூறுகையில், ‘‘இது, எனக்கு கிடைத்த கவுரவம் மற்றும் அளவிடற்கரிய பொறுப்பு,’’ என்றார்.
கட்டுமான பிரிவில், பிளானிங் இன்ஜினியராக, 1984ல் வேலைக்கு சேர்ந்தவர், சுப்ரமணியன். இவரது தலைமையில், எல் அண்டு டி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், உலகின், ‘டாப் – 25’ ஒப்பந்த நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது. 2011ல், நிர்வாகக் குழுவிலும் சுப்ரமணியன் இடம் பெற்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|