பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
04:53

உள்ளீட்டு வரிச் சலுகையில், ஜி.எஸ்.டி., செலுத்திய வரி எவ்வாறு, ‘செட் ஆப்’ செய்ய வேண்டும்?– ரமணி, திருச்செங்கோடுஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த நபர், பொருட்கள் மற்றும் சேவைகளை பெறும் போது, சி.ஜி.எஸ்.டி., எனப்படும், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., (சி.ஜி.எஸ்.டி., + எஸ்.ஜி.எஸ்.டி.,) அல்லது ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிகளை செலுத்தியிருப்பார். தன் விற்பனையின் போது செலுத்த வேண்டிய, சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., அல்லது ஐ.ஜி.எஸ்.டி., வரியை, பின் வருமாறு உள்ளீட்டு வரிச்சலுகை பெற்று, மீதித் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும். எஸ்.ஜி.எஸ்.டி.,யின், ஐ.டி.சி., முதலில், எஸ்.ஜி.எஸ்.டி., செலுத்தவும், பின், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தவும் பயன்படுத்தப்படலாம் சி.ஜி.எஸ்.டி.,யின், ஐ.டி.சி., முதலில், சி.ஜி.எஸ்.டி., செலுத்தவும், பின், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தவும் பயன்படுத்தப்படலாம் ஐ.ஜி.எஸ்.டி.,யின், ஐ.டி.சி., முதலில், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தவும், பின், சி.ஜி.எஸ்.டி., செலுத்தவும், அதன்பின், எஸ்.ஜி.எஸ்.டி., செலுத்தவும் பயன்படுத்தப்படலாம் சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி.,யின், ஐ.டி.சி.,யை அவற்றின் இடையே உபயோகப்படுத்த முடியாது.
ஐயா, நான் தமிழ்நாடு வனத்துறைக்கு, கான்ட்ராக்ட் மூலம் சேவைகளை செய்து வருகிறேன். அதில், ஜி.எஸ்.டி., எத்தனை சதவீதம் வசூல் செய்ய வேண்டும்?– ராமன், ஊட்டிஅரசு மற்றும் அரசு சார்ந்த குறிப்பிட்ட பயனாளிகளுக்கு, பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் போது, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட மாட்டாது. நீங்கள், அரசு சார்ந்த தமிழ்நாடு வனத்துறைக்கு சேவைகள் செய்வதால், அத்தகைய சப்ளை, ஜி.எஸ்.டி., வரி வரம்பிற்குள் வராது.
எச்.எஸ்.என்., (HSN) குறியீடு என்றால் என்ன?– குணசேகர், மதுரைஜி.எஸ்.டி.,யில், பொருட்களின் வரி விகிதம், எச்.எஸ்.என்., கோடு (HSN code) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. உலக சுங்க அமைப்பினால் உருவாக்கப்பட்ட (உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பின் ஹார்மோனியஸ் சிஸ்டம் (HSN)) மூலம், 21 பிரிவுகளில், பொருட்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு பிரிவானது, பல்வேறு அத்தியாயங்களின் குழுமமாகும். அதில் ஒரு பொருளின் குறிப்பிட்ட வர்க்கத்திற்கான குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். எச்.எஸ்.என்., கோடு எட்டு இலக்க வகைப்பாடு டேரிப் ஐட்டம் (Tariff Item) என, அழைக்கப்படுகிறது. வரி விகிதமானது பொருட்களின், எட்டு இலக்க வகைப்படுத்தலின் அடிப்படையிலானது. ஜி.எஸ்.டி., கவுன்சில் பொருட்களின் முக்கியத்துவத்தையும், தேவையையும் கருத்தில் கொண்டு, வரி விகிதத்தை முடிவு செய்கிறது.
நாங்கள், ‘மேன் பவர் சப்ளை’ என, சொல்லக்கூடிய, மனிதவள சேவைகள் செய்து வருகிறோம். இதுவரை, இதற்கு எந்த வரியும் வசூல் செய்யவில்லை. எங்களுடைய சேவைக்கு, ஜி.எஸ்.டி., வருமா?– முருகவேல், ராணிப்பேட்டைஜி.எஸ்.டி., அமைப்பில், மனிதவள சேவை வழங்கல்களுக்கு வரி உண்டு. அது, 18 சதவீதத்தில் இருக்கும்.
இறக்குமதி செய்யும் போது, தற்போது, மத்திய அரசுக்கு சுங்க வரி செலுத்தி வருகிறோம். அதில் மாற்றம் ஏதேனும் இருக்குமா? செலுத்திய சுங்க வரியை, உள்ளீட்டு பயனாக பெற முடியுமா?– அகமது, துாத்துக்குடிதற்போது நடைமுறையிலுள்ள சுங்க வரியில், எவ்வித மாற்றமும் இல்லை. சுங்க வரியை, உள்ளீட்டு பயனாக பெற இயலாது. ஆனால், இறக்குமதியின் போது, மத்திய கலால் வரிக்கு நிகராக, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., (IGST) வசூலிக்கப்படும். அத்தகைய, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெறலாம்.
உள்ளீட்டு வரி பயன், ஜி.எஸ்.டி., அமைப்பில் எவ்வாறு இருக்கும்?– அருண், திருச்சிஉள்ளீட்டு வரி (இன்புட் டேக்ஸ் கிரெடிட் – ஐ.டி.சி.,) ஜி.எஸ்.டி.,யின் முக்கிய அம்சமாக உள்ளது. இது, வரிகளின் தாக்க விளைவுகளை தவிர்ப்பதை உறுதி செய்யும். இந்த சலுகை, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யப்பட்ட நபர்களால் மட்டுமே பெற முடியும். வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக, கொள்முதல் செய்த போது செலுத்தப்பட்ட வரிகளை, உள்ளீட்டு வரி பயனாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|