பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
04:59

புதுடில்லி : கேபிள் ‘டிவி’ மற்றும் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும், ஜி.டி.பி.எல்., ஹாத்வே நிறுவனத்தின் பங்குகள், இன்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன.
இந்நிறுவனம், அதன் பழைய கடன்களை திரும்பத் தரவும், நிர்வாக நடைமுறை தேவைகளை சமாளிக்கவும் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. ஜூன் 21 – 23ம் தேதிகளில், புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ளப்பட்டது. பங்கு ஒன்றின் விலை, 167 – 170 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 1.44 கோடி பங்குகளை வெளியிட்டு, 240 கோடி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இப்பங்குகள் வேண்டி, 1.53 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதையடுத்து, பங்கு ஒன்றின் விலை, 170 ரூபாய் என, முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|