பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
05:01

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலானதை தொடர்ந்து, அதனால் கிடைத்துள்ள வரி ஆதாயத்தின் அடிப்படையில், கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, அதிரடி விலை குறைப்பை அறிவித்து வருகின்றன.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், இரு தினங்களுக்கு முன், முதன்முதலில், 3 சதவீதம் வரை, விலை குறைப்பை அறிவித்தது. இதையடுத்து, டொயோட்டோ, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கார் விலையை குறைத்தன.
இந்நிலையில், நேற்று, போர்டு நிறுவனமும், ‘பிகோ, எகோ ஸ்போர்ட்’ உள்ளிட்ட கார்களின் விலையில், 4.5 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்படி, இந்நிறுவனங்களின் கார் விலை 2,000 – 3 லட்சம் ரூபாய் வரை குறையும். இதையடுத்து, டி.வி.எஸ்., ஹீரோ மோட்டோ கார்ப், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் விலையை குறைத்துள்ளன.
டி.வி.எஸ்., மோட்டார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருசக்கர வாகனங்கள் விலை, 350 – 1,500 ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் வாகனங்களுக்கான விலை குறைப்பு, அந்தந்த மாநிலங்களை பொறுத்து, 4,150 ரூபாய் வரை இருக்கும்’ என, கூறப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 40 ஆயிரம் ரூபாய் – 1.10 லட்சம் ரூபாய் வரை விலை உள்ள, இருசக்கர வாகனங்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனமும் வாகனங்கள் விலையை குறைத்துள்ளது. ‘அனைத்து வாகனங்களுக்கான விலை, 400 – 1,800 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. பிரீமியம் பிரிவில், குறிப்பிட்ட சில மாடல்களுக்கு, 4,000 ரூபாய் வரை விலை குறைப்பு இருக்கும்’ என, ஹீரோ மோட்டோகார்ப் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமும், அதன் இருசக்கர வாகனங்கள் விலையை, 5,500 ரூபாய் வரை குறைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|