பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
23:56

இடம் வாடகைக்கு விடும் போது, அந்த வாடகைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுமா?– ராகினி, சென்னைவணிகம் சார்ந்த பயனாளிக்கு (வியாபார நிறுவனம், கடைகள்) நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டால், அதில், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் விதிக்கப்படும். ஆனால், நுகர்வோர் குடியிருப்பு நோக்கத்திற்காக வாடகைக்கு அளித்தால், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படமாட்டாது.
ஐயா, நான் ஒரு டிரேடிங் நிறுவனத்தை சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தி வருகிறேன். சென்னையின் ஆண்டு வருமானம், 13 லட்சம் ரூபாய். ஐதராபாத்தின் ஆண்டு வருமானம், 9 லட்சம் ரூபாய். நான், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா? அப்படியெனில், எந்த மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும்?– நசீர், சென்னைஒரு நபரின் மொத்த ஆண்டு வருமானம், 20 லட்சம் ரூபாய்க்கு மேலிருந்தால், ஜி.எஸ்.டி., பதிவு அவசியம். உங்களுடைய வருமானம், 20 லட்சம் ரூபாய்க்கு மேலுள்ள காரணத்தால், நீங்கள் நிறுவனம் நடத்தும் தமிழகம் மற்றும் தெலுங்கானாவில், ஜி.எஸ்.டி., பதிவு செய்வது அவசியம்.
உள்ளீட்டு வரி பயன் பெறுவதற்கு, வழங்குனருக்கு பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டுமா?– ஆரோக்கியராஜ், கோவைபணம் செலுத்திய பின் தான், உள்ளீட்டு வரிச்சலுகையை பெற வேண்டும் என்ற அவசியமில்லை. வழங்கல் நிகழ்ந்த, 180 நாட்களுக்குள் பணத்தை செலுத்தினால் போதுமானது.
அனைத்து உள்ளீட்டு பொருட்கள் மீதும், உள்ளீட்டு வரிச்சலுகை உண்டா?– ரகுராம், பெசன்ட் நகர்வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிற அனைத்து உள்ளீட்டு பொருட்கள், சேவைகள், மூலதனப் பொருட்கள் ஆகியவை, (சிலவற்றைத் தவிர்த்து), உள்ளீட்டு வரிக் கடன் பெறுவதற்கு தகுதி உடையவை. கட்டடம் கட்டல், வாடகை கார், உணவு மற்றும் பானங்கள் வழங்கல், அழகு சிகிச்சை, சுகாதார சேவைகள், ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் உள்ளீட்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் வரிகளை, ஐ.டி.சி., ஆக பயன்படுத்த முடியாது.
பதிவு செய்யப்படாத நபருக்கு வழங்கும் அனைத்து விற்பனை விபரங்களை, மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டுமா?– ராஜா, தேவிப்பட்டினம்பதிவு செய்யப்படாத நபருக்கு வழங்கும் வழங்கல்களை, விலைப்பட்டியல் வாரியாக, மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஒரு விலைப்பட்டியலின் மதிப்பு, 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த வினியோகத்தின் விபரங்களை, மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
நான், ஓசூரில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறேன். பெங்களூரிலிருந்து வரும் நபர்கள், என் கடையில் பொருட்களை பெற்றால், அத்தகைய விற்பனைக்கு, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா?– நீலகண்டன், ஓசூர்பெங்களூரிலிருந்து வந்து பொருட்களை பெற்றாலும், நீங்கள் மேற்குறிப்பிட்ட சேவை வழங்கும் இடம் ஓசூர் ஆகும். எனவே, ஐ.ஜி.எஸ்.டி., வசூல் செய்யக் கூடாது. சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டும்.
நாங்கள், காஞ்சிபுரத்தில் பட்டுத் துணிக்கடை நடத்தி வருகிறோம். பெங்களூரு, மும்பை போன்ற இடங்களுக்கு சென்று, ‘ஸ்டால்’ அமைத்து, சில நேரங்களில் விற்பனை செய்து வருகிறோம். இத்தகைய பரிவர்த்தனைக்கு, ஜி.எஸ்.டி., அனுமதி அளிக்குமா?– வெங்கடேசன், சின்ன காஞ்சிபுரம்நீங்கள், வேறொரு மாநிலத்தில் ஸ்டால் அமைத்து பொருட்களை விற்பனை செய்தால், அந்த மாநிலத்தில், ‘கேஷுவல் டேக்சபிள் பெர்சன்’ (Casual Taxable Person) என, ஜி.எஸ்.டி., பதிவு பெற்று, உத்தேச, ஜி.எஸ்.டி.,யை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இத்தகைய பதிவு, 90 நாட்களுக்கு அந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|