பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
23:57

புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர் ஆகியோர் பயன்படுத்தும் சாதனங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, 5 சதவீதம் தான் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பார்வையற்றவர்கள் உபயோகிக்கும் எழுதுகோல் உள்ளிட்ட பொருட்கள், சக்கர நாற்காலி, கைத்தடி, பேசும் புத்தகங்கள், காது கேட்பு கருவிகள், சிறுநீர் பைகள், படுக்கை புண்களை தடுக்கும் சிறப்பு ஜெல்லி குஷன்கள், படியேற பயன்படும் மின் நாற்காலிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும்.இந்த சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான பெரும்பாலான மூலப்பொருட்களுக்கு, வரி, 18 சதவீத அளவிற்குத்தான் உள்ளது.
இதை, தயாரிப்பு நிறுவனங்கள், உள்ளீட்டு வரியாக பெற்றுக் கொள்ளலாம். எனவே, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றின் விலையை, தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காங்., துணைத் தலைவர் ராகுல், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்களுக்கு அதிக வரி விதித்துள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|