பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
23:59

பெங்களூரு : இந்தியாவில் உள்ள, மிக பழமையான வங்கிகளில் ஒன்றும், பொதுத் துறை வங்கியுமான, சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, மெல்வின் ரெகோ பதவி ஏற்றுள்ளார்.
இவர், இந்த பதவிக்கு வருவதற்கு முன், பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். மேலும், ஐ.டி.பி.ஐ., வங்கியின் துணை நிர்வாக இயக்குனராகவும், இவர் பதவி வகித்துள்ளார். ஐ.டி.பி.ஐ., வங்கியில், 1984லிருந்து பணியாற்றி உள்ளார். 2003ல், டாடா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை, ஐ.டி.பி.ஐ., கையகப்படுத்தியதை அடுத்து, ஐ.டி.பி.ஐ., ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
பின், 2008ல், மீண்டும், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு திரும்பி, சர்வதேச வங்கி பிரிவிற்கு தலைவராக பொறுப்பேற்றார். பன்னாட்டு அனுபவங்களும், ரெகோவிற்கு கூடுதல் பலமாகும்.புனேவில் உள்ள, சிம்பியாஸிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில், எம்.பி.ஏ., படித்தவர். ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, அன்னிய செலாவணியை கொண்டு வருவதில் அளப்பரிய பங்கு வகித்தவர். ரெகோ, சிறந்த வங்கியாளர் மட்டுமல்ல; சிறந்த விளையாட்டு வீரரும், நல்ல இசைப்பிரியரும் கூட.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|