தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவு ... புதிய தொழில் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் புதிய தொழில் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2017
00:58

நான், ஜாப் ஒர்க்­கிற்கு பொருட்­களை அனுப்­பும் போது அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?– ஹரி­ஹ­ரன், திருச்சிஜாப் ஒர்க் முறை­யில், நீங்­கள் பொருட்­களை வேறொரு இடத்­திற்கு அனுப்­பும் போது, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­ட­மாட்­டது. நீங்­கள், டெலி­வரி செலான் மூலம் பொருட்­களை, ஜி.எஸ்.டி., இல்­லா­மல் அனுப்­ப­லாம்.
சார், நான் ஜாப் ஒர்க்­கிற்கு பொருட்­களை அனுப்­பும் நபர், ஜி.எஸ்.டி., பதிவு பெற­வில்லை. இத­னால், எனக்கு வரி விதிப்­பில் பாதிப்பு இருக்­குமா?– சாகர், கரூர்நீங்­கள் பதிவு செய்­யாத நப­ருக்கு, ஜாப் ஒர்க் முறை­யில் பொருட்­களை அனுப்­பி­னால், வரி விதிப்­பில் எந்த பாதிப்­பும் இல்லை. ஆனால், நீங்­கள் கீழ்­கண்ட விதி­மு­றை­களை பின்­பற்ற வேண்­டும். ஜாப் ஒர்க் வேலை செய்­யும் இடத்தை, உங்­கள் வணி­கத்­தின் கூடு­தல் இட­மாக பதிவு செய்து கொள்ள வேண்­டும் ஜாப் ஒர்க் சார்ஜஸ் செலுத்­தும் போது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்தி, அதை உள்­ளீட்டு பய­னாக பெற்று விட­லாம்.
ஐயா, என் வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்­கும் குறை­வாக இருக்­கும் தறு­வா­யி­லும், நானா­கவே முன்­வந்து, ஜி.எஸ்.டி., பதிவு செய்­துள்­ளேன். இப்­போது, என் முதல் வழங்­க­லி­ல்­இருந்து வரி வசூல் செய்ய வேண்­டுமா அல்­லது விற்­பனை தொகை, 20 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது வரி வசூல் செய்ய வேண்­டுமா?– செந்­தில், சென்னைநீங்­கள் பதிவு செய்­து­விட்ட கார­ணத்­தால், பதிவு செய்­யப்­பட்ட நபர் வழங்­கக் கூடிய ஒவ்­வொரு வழங்­கல்­க­ளி­லும், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும்.
வேறொரு மாநி­லத்­தில் வழங்­கிய, சி.ஜி.எஸ்.டி., / எஸ்.ஜி.எஸ்.டி., பில்­லில் உள்ள, மாநில, ஜி.எஸ்.டி.,யை தமி­ழ­கத்­தில் செலுத்த வேண்­டிய, மாநில, ஜி.எஸ்.டி., தொகைக்கு நிக­ராக சரி செய்து கொள்ள முடி­யுமா?– ருக்­மணி, பொண்­பாடிமுடி­யாது. வெளி­மா­நி­லத்­தில் செலுத்­திய, எஸ்.ஜி.எஸ்.டி., தொகையை, உள் மாநி­லத்­தில் செலுத்த வேண்­டிய, எஸ்.ஜி.எஸ்.டி., தொகை­யு­டன் சரி செய்து கொள்ள இய­லாது.
எங்­கள் நிறு­வன வேலை­யாட்­கள், ஜாப் ஒர்க்­கிற்­காக வெளி­யூர் லாட்­ஜில் தங்­கி­னால், லாட்ஜ் ரசீ­தி­லுள்ள சேவை வரி தொகையை, தற்­போது உள்­ளீட்டு பய­னாக பெற்று வரு­கி­றோம். இதே நடை­முறை, ஜி.எஸ்.டி.,யிலும் உண்டா?– ரஞ்­சித், வேலுார்ஆம், உள்­மா­நி­லத்­தில் செலுத்­திய லாட்ஜ் ரசீ­தி­லுள்ள, சி.ஜி.எஸ்.டி., / எஸ்.ஜி.எஸ்.டி.,யை, முழு பய­னாக பெற­லாம். அதுவே, வெளி­மா­நி­லத்­தில் தங்­கி­னால், அந்த ரசீ­தி­லுள்ள, எஸ்.ஜி.எஸ்.டி., தொகையை உள்­ளீட்டு பய­னாக பெற முடி­யாது.
சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் பகு­தி­யி­ல்­ இருந்து, சில நேரங்­களில் நாங்­கள் பொருட்­களை பெறு­கி­றோம். தற்­போது அதை இறக்­கு­ம­தி­யாக கருத்­தில் கொண்டு, சுங்­கம் மற்­றும் சி.வி.டி., வரி செலுத்தி வரு­கி­றோம். இது, ஜி.எஸ்.டி.,யில் எவ்­வாறு மாறும்?– பாபு, ஸ்ரீபெ­ரும்­பு­துார்சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளி­லி­ருந்து பொருட்­களை பெற்­றால், முன்பு போலவே அது இறக்­கு­ம­தி­யாக கரு­தப்­படும். ஆனால், சி.வி.டி., வரிக்கு பதி­லாக, நீங்­கள் ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, உள்­ளீட்­டுப் பயன் பெற­லாம்.
தற்­போது எங்­க­ளி­டத்­தில் உள்­ளீட்டு பய­னாக, 20 ஆயி­ரம் ரூபாய் மதிப்­புள்ள கிரிஷி கல்­யாண் வரி தொகை உள்­ளது. இதை ரிட்­டர்ன் படி­வத்­ தாக்­கல் செய்து, ஜி.எஸ்.டி.,யில் பய­னாக எடுத்­துக் கொள்­ள­லாமா? – சாந்தா, விழுப்­பு­ரம்ஜி.எஸ்.டி., சட்­ட­வி­தி­யின் கீழ், முன்­செ­லுத்­திய செஸ்ஸை, உள்­ளீட்டு வரிப்­ப­ய­னாக பெற இய­லாது. எனவே, நீங்­கள் ரிட்­டர்ன் படி­வத்தை தாக்­கல் செய்­த­ போ­தி­லும், கே.கே.சி.செஸ் தொகையை உள்­ளீட்­டுப் பய­னாக பெற இய­லாது.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)