பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
01:00
புதுடில்லி : ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனம், ஜூன் மாதம் சேவை துறையின் வளர்ச்சி குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: சேவைகள் துறை, தொடர்ந்து எட்டு மாதங்களாக, திடமான வளர்ச்சியை கண்டு வருகிறது. புதிய வர்த்தகங்கள் சூடுபிடித்துள்ளன. பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது; அவற்றை சந்தைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முறைகள், நல்ல பயனை அளித்து வருகின்றன. இதனால், சேவைகள் துறை, வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது.
சேவைகள் துறைக்கான நிக்கி இந்தியா சர்வீசஸ், பி.எம்.ஐ., குறியீடு, ஜூன் மாதம், 53.1 புள்ளியாக உயர்ந்துள்ளது. இது, மே மாதம், 52.2 புள்ளியாக இருந்தது. இக்குறியீடு, நடப்பாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், சராசரியாக, 51.8 புள்ளியாக இருந்தது. இது, ஏப்., – ஜூனில், 52.2 புள்ளியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இரண்டாவது காலாண்டில் காணப்பட்டதை விட, இந்தாண்டு, அதே காலத்தில், சேவைகள் துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், இந்தாண்டு துவக்கத்தில் மந்தமாக இருந்த சேவைகள் துறை, தற்போது எழுச்சி கண்டு வருவது புலனாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|