பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
22:38

புதுடில்லி : வாகன போக்குவரத்து நெரிசலை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு தீர்வு காணும் நோக்கில், தனியார் கார், ‘ஷேர்’ திட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இத்திட்டம் அமலானால், மக்கள், தனியார் காரிலும் கட்டணம் செலுத்தி பயணிக்கும் வசதி கிடைக்கும். தற்போது, மக்கள் பயன்பாட்டிற்கு, தனியார் வாடகை டாக்சி, ஆட்டோ, ‘ஷேர்’ ஆட்டோ ஆகியவை உள்ளன. இச்சேவைகளை, வாகன போக்குவரத்து சட்டப்படி, பொது பயன்பாட்டுக்கு என, உரிமம் பெற்ற வாகனங்களில் மட்டுமே வழங்க முடியும்.தனியார் கார்களை, பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்க, தற்போது சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு அனுமதிக்க, வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அது, ஓட்டுனர் மற்றும் பயணியர் பாதுகாப்பு, வரி விதிப்பு, வருவாய் பகிர்வு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இத்திட்டம் அமலானால், பயணியருக்கு கூடுதல் போக்குவரத்து வசதியும், ஓட்டுனர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்; வாகன நெரிசலும் கட்டுப்படுத்தப்படும்.தற்போது, ‘ஓலா, ஊபர்’ போன்ற, வாகன சேவை ஒருங்கிணைப்பு நிறுவனங்கள், ஓட்டுனர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆயிரக்கணக்கான கார்கள் மூலம் போக்குவரத்து வசதிகளை அளிக்கின்றன. அத்துடன், ‘ஷேர் ரைடு’ முறையில், பயணக் கட்டணத்தை பகிரும் சேவையையும் வழங்குகின்றன. இந்நிறுவனங்களின் வர்த்தக பயன்பாட்டு வாகன உரிம கட்டணச் செலவு, தனியார் கார், ‘ஷேர்’ திட்டம் அமலானால் குறையும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|