பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
22:39

புதுடில்லி : ‘முதலீட்டாளர்களின் பார்வை, ‘ஐமியா’ நாடுகள் பக்கம் திரும்பி உள்ளதால், வரும் மாதங்களில், அந்நாடுகளில் அதிகளவில் புதிய பங்கு வெளியீடுகள் இருக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான, ‘எர்னஸ்ட் அண்டு யங்’ புதிய பங்கு வெளியீடுகள் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தாண்டு ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், ‘ஐமியா’ எனப்படும், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், புதிய பங்கு வெளியீடுகள் சூடுபிடித்துள்ளன.உலக நாடுகள் சிலவற்றில், ஸ்திரமற்ற அரசியல் சூழல் காணப்பட்ட போதிலும், ‘ஐமியா’ நாடுகளில், புதிய பங்கு வெளியீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதன் காரணமாக, சர்வதேச அளவில், சுறுசுறுப்பான புதிய பங்கு வெளியீடுகள் நடைபெற்ற நாடுகளில், இரண்டாவது இடத்தை, ‘ஐமியா’ பிடித்துள்ளது.பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அங்கு நிலவி வந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாடுகளில், முதலீட்டாளர்கள், நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கி உள்ளனர்.அது போல, ‘ஐமியா’ நாடுகளிலும் புதிய பங்கு வெளியீடுகள் வரவேற்பை பெற்றுள்ளன. இதில், இந்தியா முதலிடத்திலும், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் அடுத்த இடங்களிலும் உள்ளன.சர்வதேச அளவில், இந்தாண்டு துவங்கி இதுவரை, 772 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 8,340 கோடி டாலர் திரட்டப்பட்டு உள்ளது. இதில், ஏப்., – ஜூன் வரையிலான காலத்தில், மூன்று துறைகளில், அதிகளவில் புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன.அவற்றில், அதிகபட்சமாக, தொழிற்நுட்பத் துறையைச் சேர்ந்த, 13 நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 150 கோடி டாலர் திரட்டிக் கொண்டன. அடுத்து, தொழில் துறையில், 12 நிறுவனங்கள், 320 கோடி டாலர் திரட்டின. ஆரோக்கிய பராமரிப்பு துறையைச் சேர்ந்த, 11 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 230 கோடி டாலர் திரட்டி உள்ளன.ஆறு மாதங்களில், இந்தியாவின், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள்; சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பங்குச் சந்தைகள் ஆகியவற்றில், 57 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 230 கோடி டாலர் திரட்டப்பட்டு உள்ளது.மத்திய அரசின் கொள்கைகள், நிர்வாக சீர்திருத்தம் போன்றவை காரணமாக, பங்குச் சந்தைகளில், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். அதனால், நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளன. இது, இரண்டாவது அரையாண்டில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|