4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா’4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா’ ... ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ...
நுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2017
02:46

புது­டில்லி:‘‘நுண்­ணுா­ட்­டச் சத்து உண­வுப் பொருட்­கள் தயா­ரிப்பு, பத­னீடு, வினி­யோ­கம் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, புதிய தரக் கட்­டுப்­பாட்டு விதிமு­றை­களில் மாற்­றம் தேவைப்­பட்­டால், நுகர்­வோர் நலன் பாதிக்­காத வகை­யில் மாற்­றம் செய்ய தயா­ராக உள்­ளோம்,’’ என, உணவு பாது­காப்பு மற்­றும் தரக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் தலை­வர் பவன் குமார் அகர்­வால் தெரி­வித்து உள்­ளார்.
இந்த ஆணை­யம், ௨௦௧௬ டிசம்­ப­ரில், உடல் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான துணை உண­வு­கள், நுண்­ணுா­ட்­டச் சத்து உண­வுப் பொருட்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான, தரக் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை வெளி­யிட்­டது.புதிய விதி­மு­றை­கள், 2018 ஜன., முதல் அம­லுக்கு வர உள்ளன. இந்­நி­லை­யில், இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை கூட்­ட­மைப்­பின் கருத்­த­ரங்­கில், பவன் குமார் அகர்­வால் பேசி­ய­தா­வது:உடல் ஆரோக்­கிய மேம்­பாட்­டிற்­கான துணை உண­வு­கள் மற்­றும் நுண்­ணுா­ட்­டச் சத்து உண­வுப் பொருட்­கள் சந்­தை­யில், போலி­கள் பெருகி வரு­வது கவலை அளிக்­கிறது.
இத்­த­கைய தரக் குறை­வான உண­வுப் பொருட்­க­ளால், மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுக்க, அவற்­றுக்­கான தரக் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­கள் வெளி­யி­டப்­பட்டு உள்ளன. அதில், இத்­து­றை­யி­ன­ருக்கு அதி­ருப்தி உள்­ளது, கவ­னத்­திற்கு வந்­துள்­ளது.குறிப்­பாக, ஊட்­டச்­சத்து உண­வு­களை தயா­ரிக்க பயன்­படும், உள்­ளீட்டு பொருட்­க­ளுக்­கான விதி­மு­றை­களில் மாற்­றம் தேவை என, இத்­து­றை­யி­னர் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.இதை­யொட்டி, நுகர்­வோர் நல­னில் எவ்­வித சம­ர­சத்­திற்­கும் இடம் கொடுக்­கா­மல், விதி­மு­றை­களில் மாற்­றம் செய்ய தயா­ராக இருக்­கி­றோம். புதிய விதி­களை அமல்­ப­டுத்த, இன்­னும் ஐந்து மாதங்­கள் அவ­கா­சம் உள்­ளது. அத­னால், பிரச்­னை­களை பேசி தீர்த்­துக் கொள்­ள­லாம்.
ஆரோக்­கி­யத்­திற்­கான, ஊட்­டச்­சத்து உண­வுத் துறை சந்­தை­யில் புழங்­கும் போலி துணை உண­வு­கள், நுண்­ணுா­ட்டச் சத்து உண­வுப் பொருட்­கள் ஆகி­ய­வற்றை, தர பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த, வலு­வான கட்­ட­மைப்பு இல்லை.இதை­யொட்டி, தொழிற்­நுட்­பக் குழு ஒன்றை, ஆணை­யம் அமைத்­துள்­ளது. இந்த குழு, துணை உண­வு­கள், நுண்­ணுா­ட்­டச் சத்து உண­வுப் பொருட்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான, சிறந்த தயா­ரிப்பு நடை­மு­றையை உரு­வாக்­கும்.
உடல் ஆரோக்­கி­யத்­திற்­கான துணை உண­வு­கள், நுண்­ணுா­ட்­டச் சத்து உண­வுப் பொருட்­கள் துறைக்கு, பிர­கா­ச­மான வளர்ச்சி காத்­தி­ருக்­கிறது. இதை சீர்­கு­லைக்­கும் வகை­யில், ஒரு­சில போலி நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­கள் உள்ளன. அவற்­றுக்கு, புதிய விதி­மு­றை­கள் முடிவு கட்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)