மாலை நேர நிலவரம் : தங்கம் விலை மீண்டும் உயர்வுமாலை நேர நிலவரம் : தங்கம் விலை மீண்டும் உயர்வு ... பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம் பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
00:46

சார், நாங்­கள், இரு மாநி­லங்­களில் விற்­பனை மையம் வைத்­துள்­ளோம். இரு இடங்­க­ளி­லும், ஜி.எஸ்.டி., பதிவு பெற்­று­விட்­டோம். நாங்­கள், தற்­போது இரு மாநி­லங்­க­ளுக்­கும் சேர்த்து, சென்­னை­யில் உள்ள தலைமை அலு­வ­ல­கத்­தில், ‘அக்­க­வுன்ட்ஸ்’ புத்­த­கங்­கள் வைத்­துள்­ளோம். இது சரியா அல்­லது தனித்­த­னியே அக்­க­வுன்ட்ஸ் புத்­த­கங்­கள் வைத்­துக் கொள்ள வேண்­டுமா?–ராக­வன், விழுப்­பு­ரம்பதிவு செய்­யப்­பட்ட ஒவ்­வொரு இடத்­திற்­கும் உரிய அக்­க­வுன்ட்ஸ் புத்­த­கங்­கள், தனித்­த­னியே அந்­தந்த இடத்­தில் பரா­ம­ரிக்க வேண்­டும்.
சார், நான் நகைக் கடை வைத்­துள்­ளேன். வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பழைய நகை­களை பெற்று, அதற்கு நிக­ராக ரொக்­கமோ புதிய நகையோ வழங்­கி­னால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், வரி செலுத்த வேண்­டாம் என, தாங்­கள், ‘தின­ம­லர்’ நாளி­த­ழில், ‘ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்’ பகு­தி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தீர்­கள். ஆனால், வேறு சிலர் அத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு வரு­மென்று கூறு­கின்­ற­னர். இது, குழப்­ப­மாக உள்­ளது. தய­வு­கூர்ந்து விளக்­க­வும்.– வாசு­தே­வன், ஈரோடுஜி.எஸ்.டி., சட்ட விதி­யில், எந்த மாற்­ற­மும் இல்லை. இத்­த­கைய பரி­வர்த்­தனை, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி வரம்­பிற்­குள் வராது. ஏனெ­னில், வாடிக்­கை­யா­ளர்­களை வியா­பா­ரம் செய்­யும் நப­ராக கருத முடி­யாது. இதுவே, நகை வியா­பா­ரம் செய்­யும் பதிவு பெறாத ஒரு நபர், வேறொரு பதிவு பெற்ற நகை வியா­பா­ரி­யி­டம் நகை­களை விற்­றால், அத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு தான், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை வரும்.
நான், முத்­திரை தாள் விற்­ப­னை­யா­ள­ராக உள்­ளேன். ஆண்­டிற்கு, 18 லட்­சம் ரூபாய் – 25 லட்­சம் ரூபாய் வரை, முத்­திரை தாள் விற்­பனை செய்­கி­றேன். இதற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 360 ரூபாய் சேவை கட்­ட­ண­மாக, அரசு எனக்கு வழங்­கு­கிறது. ஜி.எஸ்.டி., பதி­விற்கு ஆண்டு கொள்­மு­தலை கணக்­கில் கொள்ள வேண்­டுமா அல்­லது ஆண்­டின் மொத்த சேவை கட்­ட­ணத்தை கணக்­கிட வேண்­டுமா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன். மேலும், ஜி.எஸ்.டி., விண்­ணப்­பிக்க வேண்­டுமா; வேண்­டாமா என்­ப­தை­யும் அறிய விரும்­பு­கி­றேன்.– பத்­மினி, திரு­வள்­ளூர்உங்­கள் சேவை கட்­ட­ணத்தை மட்­டுமே கணக்­கில் கொள்ள வேண்­டும். உங்­க­ளின் சேவை வரு­மா­னம் ஆண்­டிற்கு, 20 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது, ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்­டால் போது­மா­னது.
நாங்­கள், பல்­பொ­ருள் அங்­காடி வைத்­துள்­ளோம். எங்­க­ளி­டம், நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக, 200 – 300 வாடிக்­கை­யா­ளர்­கள் பொருட்­களை வாங்­கிச் செல்­கின்­ற­னர். நாங்­கள், ஜி.எஸ்.டி., ரிட்­டர்ன் படி­வம் தாக்­கல் செய்­யும் போது, விலைப் பட்­டி­யல் வாரி­யான விப­ரங்­களை கட்­டா­யம் தாக்­கல் செய்ய வேண்­டுமா? இது, எங்­க­ளுக்கு கடி­ன­மாக இருக்­கும்.– ராஜ்­கு­மார், கம்­பம்நீங்­கள், ஜி.எஸ்.டி., ரிட்­டர்ன் படி­வத்தை தாக்­கல் செய்­யும் போது, நுகர்­வோ­ருக்கு செய்த விற்­ப­னையை, விலைப் பட்­டி­யல் வாரி­யாக தாக்­கல் செய்ய வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை. ஒரு நாளில், நுகர்­வோ­ருக்கு செய்த விற்­ப­னையை, மொத்­த­மாக குறிப்­பிட்­டால் போது­மா­னது.
ஜி.எஸ்.டி அமைப்­பில் ஏற்­று­ம­திக்­கான, ‘ரீபண்டு’ எத்­தனை நாட்­க­ளுக்­குள் கிடைக்­கும்?– தியா­க­ரா­ஜன், சூலுார்மத்­திய அரசு தந்த உறு­தி­யின்­படி, பணத்தை திரும்­பப் பெறு­வ­தற்கு விண்­ணப்­பித்த, ஏழு நாட்­க­ளுக்­குள், 90 சத­வீ­தம் அளிக்­கப்­படும். மீதம், 10 சத­வீ­தம் விண்­ணப்­பத்தை பரி­சீ­லித்து வழங்­கப்­படும்.
நாங்­கள், ‘வாட்’ பதிவு பெற­வில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., பதி­விற்கு விண்­ணப்­பித்­து­விட்­டோம். எங்­க­ளி­டம், 2017 ஜூன், 30ல் உள்ள கையி­ருப்பு சரக்­கிற்கு, 60 சத­வீ­தம் வரை, உள்­ளீட்டு பயன் எடுத்­துக் கொள்­ள­லாம் என, கரூ­ரில், ‘தின­ம­லர்’ நடத்­திய, ஜி.எஸ்.டி., கருத்­த­ரங்­கில் நீங்­கள் கூறி­னீர்­கள். அந்த கையி­ருப்பு சரக்கை, நாங்­கள், ஜூலை மாதத்­திலேயே விற்­று­விட வேண்­டுமா அல்­லது ஏதே­னும் சலுகை உள்­ளதா?– அன்­புச்­செல்வி, கரூர்நீங்­கள், ஆறு மாதங்­க­ளுக்­குள், 2017 ஜூன், 30ல் உள்ள கையி­ருப்பு சரக்கை விற்­பனை செய்ய வேண்­டும். மாதா­மா­தம் விற்­ப­னைக்கு ஏற்­றார்­போல், செலுத்­திய வரி­யில், 60 சத­வீ­தம் உள்­ளீட்டு பயன் பெற­லாம்.
நான், திரு­மண மண்­ட­பம் நடத்தி வரு­கி­றேன். இதற்கு எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்?– அமிர்­த­ராஜ், வேலுார்நீங்­கள், 18 சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்.
நான், முந்­திரி பருப்­பு­களை விளை­வித்து, மொத்த விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்து வரு­கி­றேன். என் ஆண்டு மொத்த விற்­பனை, 25 லட்­சம் ரூபாய் – 30 லட்­சம் ரூபாய் வரை இருக்­கும். முந்­திரி பருப்­பிற்கு, ஜி.எஸ்.டி., உண்டா? நான் பதிவு பெற வேண்­டுமா?– கும­ர­குரு, பண்­ருட்டிமுந்­திரி பருப்­பிற்கு, 5 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., உண்டு. உற்­பத்­தி­யா­ள­ரா­கிய நீங்­கள் வரி வசூல் செய்ய தேவை­யில்லை. உங்­க­ளி­ட­மி­ருந்து கொள்­மு­தல் செய்­யும், ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நபர், அதற்­கான வரியை, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், அர­சுக்கு செலுத்தி உள்­ளீட்டு வரி பயனை பெற­லாம்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)